87 வயது மூதாட்டியை 30 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை
வயது முதிர்வின் காரணமாக பல மாதங்களாக படுத்த படுக்கையாகக் கிடந்த 87 வயது மூதாட்டியை 30 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் டெல்லி மேற்கு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
டெல்லியில் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது திலக் நகர். அங்கு 87 வயது மூதாட்டி வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பல மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். 65 வயது உடைய அந்த மூதாட்டி மகள்தான் அவரை கண்காணித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மூதாட்டியின் மகள் வெளியே சென்றிருந்த நேரம் அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் வீட்டுக்குள் நுழைந்து இருக்கிறார். படுக்கையில் படுத்திருந்த மூதாட்டி யார் என்று கேட்டிருக்கிறார். கேஸ் சர்வீஸ் செய்ய வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் அந்த இளைஞர். ஆனால் அந்த இளைஞரின் செயல் மூதாட்டிக்கு சந்தேகம் வந்திருக்கிறது.
சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை கூப்பிட முயற்சித்திருக்கிறார். ஆனால் அதற்குள் அந்த இளைஞர் மூதாட்டியிடம் கடுமையாக நடந்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். பின்னர் வீட்டிலிருந்து தப்பி ஓடியிருக்கிறார். வெளியே சென்றிருந்த மூதாட்டியின் மகள் வீடு திரும்பி வந்த போது தாய் படுகாயமுற்று கிடந்ததை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். என்ன நடந்தது என்று கேட்டபோது அழுதுகொண்டே தாய் சொன்னதை கேட்டதும் மேலும் அதிர்ந்து போயிருக்கிறார் அந்த பெண்.
உடனே மேற்கு டெல்லி மேற்கு போலீசிடம் அந்தப் பெண் புகார் அளிக்க, போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்த செல்போனையும் திருடிக்கொண்டு போய் இருக்கிறார் அந்த இளைஞர். அதை வைத்து டெல்லி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அந்த இளைஞர் துப்புரவு தொழிலாளி என்பது தெரியவந்திருக்கிறது.
அவரை கைது செய்து, செல்போனை திருடி சென்றதை மட்டுமே முதலில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததை வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து மூதாட்டியின் மகள், கொடுத்த புகாரின் பேரில் மீண்டும் அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உடல் நலக்குறைவால் பல மாதங்களாக படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒரு மூதாட்டியை இளைஞர் செய்த வெறிச்செயல் டெல்லி மேற்கு பகுதி திலக் நகர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.