ஒரு ஹோட்டல் உரிமையாளரான ஒரு தொழிலதிபரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண்
ஒரு ஹோட்டல் உரிமையாளரான ஒரு தொழிலதிபரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்த 26 வயதான ரின்சினா , இவர் கொச்சி துறைமுக பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த மாதம் 25-ந் தேதி தனது ஆண் நண்பர் ஷாஜகானுடன் வந்து ,அங்கு ரூமெடுத்து தங்கினார்
அதன் பின்னர் அந்த பெண் கடந்த 31ம் தேதி அந்த ஹோட்டல் உரிமையாளரான தொழிலதிபருக்கு போன் செய்து ,தான் தங்களின் ஹோட்டல் ரூமில் தங்கியிருந்த போது ,அங்கு சாப்பிட்டதால் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது .அதனால் தான் ஒரு ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சை பெறுவதாகவும் ,அங்கு வருமாறும் கூறினார் .அவரின் பேச்சை நம்பிய அந்த தொழிலதிபர் அந்த பெண்ணை பார்ப்பதற்காக அவர் சொன்ன இடத்திற்கு சென்றபோது ,அந்த பெண் அவரை உடலுறவு கொள்ள அழைத்தார் .அதை கேட்டு அந்த நபர் அதிர்ச்சியடைந்து ,அதற்கு சம்மதிக்காமல் அங்கிருந்து போக முயன்றார் .அப்போது அந்த பெண்ணின் நண்பர் ஷாஜஹான் அந்த பெண்ணை அந்த தொழிலதிபரை கட்டியனைக்க வைத்து ஆபாசமாக படம் பிடித்தார் .பின்னர் அந்த போட்டோவை ஊடகத்தில் வெளியிடாமலிருக்க பணம் கேட்டு மிரட்டினார் ,அதனால் அவர் தன்னிடமிருந்த 16000 ரூபாய் பணததை கொடுத்து விட்டு போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த ரின்சினாவையும் அவரின் நண்பர் ஷாஜஹானையும் கைது செய்தனர்.