இன்றைய ராசி பலன்

Loading

மேஷம்
சந்திரன் இன்று உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். வேலை விசயமான புதிய முடிவுகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் செலவுகள் எட்டிப்பார்க்கும்.
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். வேலை விஷயமாக வீண் அலைச்சல்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகமாகும். பெற்றோர்களுக்கு செலவு செய்வீர்கள்.
பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும் நிம்மதி அதிகரிக்கும்.

கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சீராகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.

சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் கவனம் தேவை. இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்திலும் வீட்டிலும் பேசாமல் மவுன விரதம் இருப்பது நல்லது.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் வழியாக எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்.

விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். மன குழப்பம் வரலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது நிதானமாக முடிவு எடுப்பது நல்லது. இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.

தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். உடன்பிறப்புக்கள் வழியில் மனநிம்மதி குறையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனநிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். மனநிலை தெளிவாக இருக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வீடு பராமரிப்பு வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். இன்று தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். சுப முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

மீனம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *