பள்ளிக்கூடம் பக்கத்திலேயே 11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம்: ஆறு பேரை போலீசார் கைது
பள்ளிக்கூடம் பக்கத்திலேயே 11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்
குஜராத் மாநிலம் நர்மதாவில் உள்ள ஒரு ஸ்கூலில் ஒரு 16 வயதான பெண்ணொருவர் 11ம் வகுப்பில் படித்து வருகிறார் .அந்த மாணவி தினமும் பள்ளிக்கு போகும்போது அந்த பகுதியில் வசிக்கும் ஆறு டீனேஜ் வாலிபர்கள் அந்த பெண்ணை அடிக்கடி பின் தொடர்ந்து சென்றனர் .
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் எஸ்டி டிப்போ பகுதியில் இருந்து வீட்டுக்கு சென்ற போது ,அந்த வாலிபர்கள் அந்த மாணவியை பள்ளிக்கு கடத்தி சென்று, பள்ளி வளாகத்திற்கு பின்னால் உள்ள ஒரு தனிமையான இடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.பின்னர் அந்த மாணவி அவர்களிடமிருந்து தப்பி சென்று ,தன் பெற்றோர் மற்றும் நணபர்களிடம் தனக்கு அந்த ஆறு பேரால் நடந்த கொடுமை பற்றி கூறியதும் ,அவ்ர்கள் அந்த நபர்கள் மீது அங்குள்ள போலீசில் புகார் கொடுத்தனர்
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.பிறகு நர்மதா மாவட்டத்தில் உள்ள டெதியபடா நகரில் 11ம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.