Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 01, 2022

Loading

மேஷம்
ராசிக்கு பத்தாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். காதல், மண வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்காக நல்ல வாய்ப்புகள் அமையும். இன்றைய தினம் காலையில் இருந்தே உடல் நலம் பிரச்சினை ஏற்படும். நோய் பாதிப்புள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கவனம் தேவை.

ரிஷபம்
ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இன்றைக்கு உங்களின் பொருளாதார நிலை உயரும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இன்றைக்கு பணி செய்வீர்கள். களத்திர ஸ்தானத்தில் உள்ள குருவும் சுக்கிரனும் உங்கள் மணவாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்துவார்கள். குடும்பத்தின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை உயரும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். கூடவே செலவுகளும் ஏற்படும். உடல் நலம் சுமாராக இருக்கும். காதல் மண வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும்.

மிதுனம்
ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. இன்றைய தினம் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருக்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். மவுன விரதம் இருப்பது நல்லது. உடல் நலம் நன்றாக இருப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். அஷ்டமச்சனியால் உடல் அசதி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உடல் உழைப்பும், வேலைப்பளுவும் அதிகரிக்கும்.

கடகம்
ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் குடும்பம் குதூகலமாக இருக்கும். இன்று இனிமையான நாள். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்து இலாபம் அடைவீர்கள். வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதிற்குள் ரொமான்ஸ் நினைவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்
ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். நோய்கள் தீர்வதற்கான காலம் இது. கடன்கள் அடைபடும் காலம் இதுவாகும். உடல் நலமும் பொருளாதார நிலையும் இன்றைக்கு சுமார்தான். காதல், மணவாழ்க்கை இன்றைக்கு உற்சாகமாக இருக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் அமையும். செய்யும் பணியில் பிறரின் இடர்பாடுகளால் காலதாமதம் ஏற்படும். அலுவலகத்தில் இன்றைக்கு உயர் அதிகாரிகளால் சில சங்கடங்கள் வரலாம் கவனம் தேவை.

கன்னி
ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. இன்றைக்கு உங்களின் வாரிசுகளால் சுப விரயம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். உங்களின் மணவாழ்க்கையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் அமையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நட்பு வட்டம் விரிவடையும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த பணவரவால் வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

துலாம்
ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரநிலை சூப்பராக இருக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சாப்பிடும் உணவில் கவனமாக இருக்கவும். வயிறு உபாதைகள் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இன்றைக்கு உங்களுக்கு கோபம் அதிகாக்கும் நிதானமாக பேசவும், அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

விருச்சிகம்
ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளதால் செய்யும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் உற்சாகமாகவே இருக்கும். சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை சூப்பராகவே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் பணி பாராட்டத்தக்க வகையில் இருக்கும். உங்களின் பயணம் சிறப்பாக இருக்கும்.

தனுசு
ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் சனியோடு சஞ்சாரம் செய்வதால் உடல் நலம் சீராக இருக்கும். செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். உடல் நலம் சீராக இருக்கும். நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்
ராசிக்குள் இன்று சந்திரன் சஞ்சாரம் செய்வதால் மனதில் சற்றே கலக்கத்துடன் இருப்பீர்கள். உடல்நலம் சூப்பராக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கூட்டாளிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனைவியின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். அம்மாவின் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். குடும்பம் குதூகலமாக இருக்கும். வெளியூர் பயணங்களை தவிர்த்து விடவும்.

கும்பம்
ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். பணவரவு அதிகமாக இருந்தாலும் கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். திருமண வாழ்வின் உச்சக்கட்ட மகிழ்ச்சியை அடைவீர்கள். உங்களின் காதல் விவகாரங்கள், மணவாழ்க்கை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும்.

மீனம்
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். உறவினர்கள் வருகையால் இன்றைக்கு உற்சாகமாக இருப்பீர்கள். அதுவே உங்களின் மண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டிய நாள். பணியிடத்தில் உங்களின் வேலை பிறரால் மதிக்கும்படி இருக்கும். உங்களின் அந்தரங்க விசயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் கவனத்தோடும் விழிப்புணர்வுடனும் இருக்கவும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *