இந்த மாதம்(பிப்ரவரி) 12 நாட்கள் வங்கிகள் இயங்காது
இந்தியாவிலுள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் பிப்ரவரி மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட 12 நாட்களுக்கு மூடப்படும்.
பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகவே மீதமுள்ள 16 நாட்களுக்கு வங்கிகள் திறந்திருக்கும். இந்த வருடம் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின்படி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2022ஆம் வருடத்துக்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மாநிலத்துக்கு மாநிலமானது வங்கி விடுமுறைகள் மாறுபடுவதால், விடுமுறை நாட்கள் மாறுபடும். ஆகவே இம்மாதம் வங்கியில் நீங்கள் ஏதாவது செய்ய வேண்டி இருந்தால் விடுமுறை நாட்களை அறிந்து பணியை முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும். மத்திய வங்கியின் பட்டியலின் அடிப்படையில் இந்த மாதத்தில் 6 விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
மீதமுள்ளவை வார இறுதி நாட்கள் ஆகும். மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறு, 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளும் இதில் அடங்கும். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும். ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல் மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாநில அளவிலான கொண்டாட்டங்கள், மதங்கள் சார்பான விடுமுறைகள் மற்றும் திருவிழாக்கள் போன்றவை அடங்கும்.
பிப்ரவரி 2022 வங்கி விடுமுறைகள்
பிப்ரவரி 2- சோனம் லோச்சார்- காங்டாக்கில் விடுமுறை
பிப்ரவரி 5- சரஸ்வதி பூஜை/ ஸ்ரீ பஞ்சமி / பசந்த பஞ்சமி – அகர்தலா, புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா வங்கிகளுக்கு விடுமுறை
பிப்ரவரி 15- முகமது ஹஸ்ரத் அலி/ லூயிஸ்-நாகை-நீ பிறந்த நாள்- இம்பால், கான்பூர் மற்றும் லக்னோவில் வங்கி விடுமுறை
பிப்ரவரி 16- குரு ரவிதாஸ் ஜெயந்தி- சண்டிகரில் விடுமுறை
பிப்ரவரி 18ஆம் தேதி- டோல் ஜாத்ரா – கொல்கத்தா வங்கி விடுமுறை
பிப்ரவரி 19ஆம் தேதி- சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி- பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூரில் வங்கி விடுமுறை
பல்வேறு மாநில அளவிலான விடுமுறைகளுடன் வார இறுதி வங்கி விடுமுறைகள்
பிப்ரவரி 6- ஞாயிறு
பிப்ரவரி 12- மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
பிப்ரவரி 13- ஞாயிறு
பிப்ரவரி 20- ஞாயிறு
பிப்ரவரி 26- மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
பிப்ரவரி 27- ஞாயிறு