வைகோவுக்கு கொரோனா நோய்த் தொற்று சென்னையில் தனிமைப்படுத்திக்கொண்டார்
சென்னை, ஜன- 30-
மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு கோவிட் நோய்த்தொற்று ஏற்பட்டதைதொடர்ந்து அவருடைய நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன .அவர் சென்னையில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்
மதிமுக பொதுசெயலாளர் வைகோவுக்கு காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது, இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார், தன்னோடு தொடர்பில் இருந்தவர்களையும் அவர் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார், அவருடைய நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளார், நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான பணிகளையும் அவர் வீட்டிலிருந்தபடி கட்சியினருடன் மேற்கொள்வார் என்று தெரிகிறது,