23 சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் பெறலாம் – தமிழ்நாடு அரசு

Loading

மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை: மாணவர்கள், பொதுமக்கள் இனி இ-சேவை மையங்கள் மூலமாகவே தங்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளது கீழ்வருமாறு:

1 முதல் 12 ஆம் வகுப்பிற்கான கல்வி இணைச் சான்று பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் பயின்றமைக்கான கல்வி இணைச் சான்றிதழ் ( Equivalence Certificate ) ( Other States and Countries ).
தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் ( NIOS ) பிற மாநிலங்களில் 10, 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கல்வி இணைச் சான்று ( Equivalence Certificate).
பிற மாநிலத்தில் 10 , 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு கல்வி இணைச் சான்று ( Equivalence Certificate)
திறந்தவெளிப் பள்ளியில் படித்ததற்கான மாநிலக் கல்வியியல் State Institute of Open School (SIOS) 10ஆம் வகுப்பு முடித்தமைக்கான ஆராய்ச்சி மற்றும் உண்மைத் தன்மைச் சான்று 1983-1904 முதல் 2001-2002 பயிற்சி நிறுவனம் (Genuiness of Open Schools in 10th Std).
தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்று (PSTM- Persons Studied in Tamil Medium) தனித் தேர்வர்களுக்கு உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியை தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க:
தாயை வீட்டை விட்டு துரத்திய மகன்கள் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *