Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 23, 2022

Loading

மேஷம்
சந்திரன் ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். இன்று பிள்ளைகளால் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கடன் பிரச்சினைகள் தீரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுப காரியம் தொடர்பாக பேச இன்று நல்ல நாள்.

ரிஷபம்
சந்திரன் ஐந்தாவது வீட்டில் பயணம் செய்கிறார். பூர்வீக சொத்து விசயங்கள் தொடர்பாக பேசலாம், இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நிதானமாக நடந்து கொள்வது நல்லது.

மிதுனம்
சந்திரன் நான்காவது வீட்டில் பயணம் செய்கிறார். வீடு வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் வீடு தேடி வரும். இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லை சற்று குறையும்.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பெண்களுக்கு வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன நிம்மதி குறையும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் நிறைவேறும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

துலாம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.

விருச்சிகம்
சந்திரன் இன்று லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.

தனுசு
சந்திரன் இன்று பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் அதிகரிக்கும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

மகரம்
சந்திரன் இன்று ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேருக்கு நேராக பார்வையிடுகிறார். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *