திருவள்ளூரில் தமிழ்நாடு நில அளவை பயிற்சி நிலையம் சார்பில் நில அளவை மற்றும் நில வரித்திட்ட சிறப்பு பயிற்சி முகாம்

Loading

திருவள்ளூரில் தமிழ்நாடு நில அளவை பயிற்சி நிலையம் சார்பில் நில அளவை மற்றும் நில வரித்திட்ட சிறப்பு பயிற்சி முகாம் :

திருவள்ளூர் ஜன 23 : மாநில அளவில் தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நில அளவை பயிற்சி சார்பில் ஆண்டுதோறும் முதுநிலை மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு நில அளவை குறித்து பயிற்சி அளிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால், நிகழாண்டில் கொரோனா தொற்று பரவும் சூழ்நிலை உள்ளதால், ஒரே இடத்தில் மாநில அளவில் 490 பேருக்கு நடத்த முடியாத சூழ்நிலையிருந்தது. அதனால், தமிழ்நாடு நில அளவை பயிற்சி நிலையத்தின் இணை இயக்குநர் அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி மையங்களை தேர்வு செய்து நடத்திக் கொள்ளவும் உத்தரவிட்டார். இப்பயிற்சி 35 நாட்கள் கொண்ட பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் திருவள்ளூரில் செயல்பட்டு வரும் செயின்ட் ஆனிஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமிற்கு நில அளவை பதிவேடுகள் துறையின் சென்னை மண்டல துணை இயக்குநர் இராமசந்திரன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். இதில் இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு நில அளவை தொடர்பான கிராம வரைபடம், சிட்டா, அ.பதிவேடு, அடங்கல், புலவரைபடம் ஆகியவை குறித்து முழு அளவில் பயிற்சி அளிக்கப்படவும் உள்ளது.

இப்பயிற்சியில் நில அளவை குறித்த நிலத்தில் புதைந்து காணாமல் போன எல்லைக்கல்லை கண்டறிந்து புதுப்பித்தல், நில பிரச்னை தீர்வு கூறுதல் போன்ற பயிற்சி அளிக்கப்படவும் உள்ளது. இப்பயிற்சி 35 நாள்கள் கொண்டதாகும். இதில் 28 நாள்கள் நில அளவை பயிற்சியும், அதைத் தொடர்ந்து 7 நாள்கள் நேரடியாக அழைத்துச் சென்று செயல் முறை மற்றும் நில வரித்திட்டம் விதிப்பது தொடர்பான பயிற்சியும் விவரமாக அளிக்கப்படவும் உள்ளது.

இதில், நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் குமாரவேல், ஆய்வாளர்கள் விஜயகுமார், ராஜ்குமார், சரவணன், வட்ட துணை ஆய்வாளர்கள் துரைராஜ், செந்தில் ஆகியோர் நில அளவை தொடர்பான பயிற்சி அளித்தனர். இதில் மாவட்ட அளவில் முதுநிலை மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர்கள் 49 பேர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *