பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம் வெள்ளை அறிக்கை வெளியிட ஓபிஎஸ் கோரிக்கை

Loading

சென்னை, ஜன- 22-

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் வெள்ளை அறிக்கை வழங்கப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கை

2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 1,250 கோடி ரூபாய்மதிப்பிலானமளிகைப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தி.மு.க. அரசால் வழங்கப்பட்டன. பொங்கல் தொகுப்பில் இருந்த பெரும்பாலான மளிகைப் பொருட்கள் சாப்பிடுவதற்கேலாயக்கற்றது என்றும், இதில் உள்ள பொருட்களை சாப்பிட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது என்றும் பொது மக்களிடமிருந்து புகார்கள்வந்தன. இன்னும் சொல்லப்போனால், நடுநிலையாளர்கள், தி.மு.க.விற்கு ஆதரவாக பேசியவர்கள்கூடஇந்தவிஷயத்தில் தி.மு.க.வைவிமர்சித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், இதுகுறித்து உணவுத் துறை அமைச்சர் சக்ரபாணி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணைவழங்கப்பட்டதாக கூறியிருக்கிறார். அமைச்சர் கூற்றுப்படி பார்த்தால், குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனம் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால், உடலுக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய பொருட்களை விநியோகம் செய்தால், கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்தால் அதைஅப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுபோல் உள்ளது. ஒரு நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை கொடுக்கப்படும் போது பொருட்களின் தரம், எடைஆகியவை குறித்து அதற்கானஒப்பந்தப் புள்ளியில் விரிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும்.அந்தத் தரத்தையும், எடையையும் கொள்முதல் ஆணை பெற்றநிறுவனங்கள்பின்பற்றியதா என்பதைதி.மு.க. அரசு சோதனை செய்யவில்லை என்பதும், இதற்குக் காரணம் ‘சேர வேண்டியவர்களுக்கு சேர வேண்டியது சென்றுவிட்டது’என்பதும்தான் பொதுமக்களின் குற்றச்சாட்டு.

அமைச்சர் சக்ரபாணி மேலும் கூறுகையில், “சிலஇடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதைமாற்றிக் கொடுத்ததோடு, அதற்குக் காரணமானவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார். இது சப்பைகட்டும் செயல். உண்மை நிலைஎன்னவென்றால், பெரும்பாலான இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டும், எந்தவிதமானநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. அமைச்சரின் பதிலைப் பார்க்கும்போதே இதில் முறைகேடு நடந்திருப்பது என்பது ஊர்ஜிதமாகிறது.

இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் யாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டன? ஒரே பொருள் இரண்டு, மூன்று நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதா? அப்படி என்றால் ஏன் அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டது?தமிழ்நாட்டு நிறுவனங்கள்ஒப்பந்தப் புள்ளியில் கலந்து கொண்டதா?கலந்து கொண்டது என்றால் எந்தெந்தநிறுவனங்கள்கலந்து கொண்டன?அவர்கள் குறிப்பிட்டவிலைஎன்ன?பொருட்களின் தரம் மற்றும் எடை குறித்தநிபந்தனைகள்ஒப்பந்தப் புள்ளியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா?தரம் மற்றும் எடைபரிசோதனை செய்யப்பட்டதா?தரமற்ற, மட்டமான பொருட்களை விநியோகித்தஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒப்பந்ததார்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது?இன்னும் எவ்வளவு கொடுக்க வேண்டும்?என்பது குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *