மயானத்திற்கு இறந்த சடலத்தை எடுத்து செல்ல பாதை இல்லாத அவலம்

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம்

உளுந்தூர்பேட்டை ஜன:21

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கல்பாதூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு சுடுகாடு இருந்தும் சுடுகாட்டிற்கு இறந்த சடலத்தை எடுத்து செல்ல பாதை இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர் இந்நிலையில் சுடுகாட்டு பாதை வேண்டி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர்களிடம் மனுக்கள் மூலமாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மயான பாதை வேண்டி வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தலித் மக்களுக்கு சுடுகாட்டு பாதை அமைத்துத் தரவேண்டுமென சம்பந்தப்பட்ட துரைக்கு உத்தரவு பிறப்பித்தது இந்த உத்தரவினை மதிக்காமல் இதுநாள் வரை அரசு அலுவலர்கள் நீதிமன்ற அவமதிப்பு செய்து வருகின்றனர் இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்தும் தலித் மக்கள் மீது கொஞ்சம் கூட அக்கறை இன்றி செயல்பட்டு வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர் ஒவ்வொரு முறையும் இறந்த சடலத்தை தனியார் வயல்வெளிகளில் எடுத்துச் செல்லும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது இதனால் அங்கு சாதிய மோதல்கள் ஏற்படும் அபாயமும் அச்சமும் இவர்களிடையே நிலவி வருகிறது ஆகியதனால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயான பாதையினை அமைத்துக் கொடுத்து தலித் மக்களின் வாழ்வில் வெளிச்சம் பெற செய்ய வேண்டுமெனவும் தற்போதுள்ள அரசு தங்களின் கோரிக்கையை ஏற்று எங்களுக்கு நீதிமன்ற உத்தரவின்படி மயான பாதை அமைத்துக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்
Attachments area

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *