தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி

Loading

சென்னை, ஜன.21 தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசு தாரர் களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகைக் கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு, இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப பராமரிப்பு தொகை வழங்கப் பட்டு வருகிறது. அதன்படி, முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் மறைந்த கலைஞர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்பப் பரா மரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 15 வாரிசு தாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த திட்டத்தின் கீழ் செல்வி, ஆ கோமதி, ஈ. நாகம்மாள், க.ராமலட்சுமி, மு.அழகரக்காள், எஸ். சிறீகலா, ஆர். கங்காதேவி, ஆர். முத்து லட்சுமி, சா. அந்தோணி யம்மாள், ச.மலர்வள்ளி, பா. ஜோதி, ஆர். மாரியம்மாள், ஆர். சரஸ்வதி, எம். தனம், எம். சங்கீதா ஆகிய 15 வாரிசுதாரர்களுக்கு ரூ.25 ஆயிரத் திற்கான காசோலை வழங்கப் பட்டது.

இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அற நிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், இயக் குநர் எஸ்.ஆர். காந்தி, உறுப்பினர் செயலர் மு. ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *