தமிழக அரசு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு மத்திய அரசு முடிவுக்கு ஜெயகுமார் வரவேற்பு

Loading

சென்னை,ஜன,21-

புதுடெல்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்,

சென்னையில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் அளித்த பேட்டி

எம்ஜிஆர் குறித்து நான் தெரிவித்த கருத்துக்களை விமர்சித்து முரசொலியில் எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, எப்போதும் திமுகவினர் என் ஞாபகமாகவே இருக்கிறார்கள், என்பது எனக்கு மகிழ்ச்சி தான், மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்தபோது, 2004, 2009 ஆகிய இரண்டு முறை குடியரசு தினத்தில் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது,

மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்த போது எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன். 2009 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தீர்களே அப்போது ஏன் சென்னை குடியரசு தின அணிவகுப்பில் அந்த அலங்கார ஊர்தியைஇடம் பெற செய்யவில்லை, புதுடெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி கலந்து கொள்ளாதநிலைக்கு செய்தி மற்றும் விளம்பர துறை தான் காரணம். சரியான வடிவில் அலங்கார ஊர்தியை வடிவமைக்காத காரணத்தால் அணிவகுப்பில் பங்கேற்க முடிய வில்லை, இதற்குதமிழக அரசுக்கு தகுதியின்மை தான் காரணம்

தங்களது அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா எதிர்ப்புப் தெரிவித்த பின்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.. சரியான முறையில் வடிவமைக்காததால் தான் அலங்கார ஊர்தி குடியரசு தின விழாவில் இடம் பெறவில்லை

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *