புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் சுகாதாரத் துறை அறிவிப்பு
புதுச்சேரி, ஜன.21 புதுச்சேரியில் ஒப்பந்த அடிப்படையில் 142 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநில சுகாதார இயக்கக இயக்குநர் டாக்டர் சிறீராமுலு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில சுகாதார சங்கம் 142 பணிகளை ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்ப உள்ளது. இதற்கான நேர் காணல் சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடத்தப்படும்.
இதன்படி 11 மருத்துவர்கள், 2 பல் மருத்துவர்கள், 36 நர்சுகள் மற்றும் மருந்தாளுனர்கள், லேப் டெக்னீஷியன்கள் என 142 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நேர்காணலுக்கு வருபவர்கள் தங்கள் படிப்பிற்கான ஒரிஜினல் சான்றிதழ், அனுபவ சான்றிதழ், வயது சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், 2 பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். முழுக்க முழுக்க இது ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும். அவர்களின் செயல்பாடு அடிப்படையில் புதுப்பிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பணியில் சேருவதற்கான நேர்காணல் வருகிற 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெறும். எந்தெந்த பணிக்கு எப்போது நேர்காணல், ஊதிய விவரம், வயது வரம்பு உள்ளிட்டவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் காந்தியார் பல் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் அலுவலர் பணிக்கான 15
இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பும் வெளி யிடப்பட்டுள்ளது.