புதுக்கோட்டையில் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களை தொடங்கி வைத்து தன்னார்வலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி
புதுக்கோட்டை,ஜன.19: புதுக்கோட்டையில் உள்ள சந்தைப் பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களை தொடங்கி வைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பேசியதாவது: இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னார்வலர்கள் அனைவரும் பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பின்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்.எனவே தன்னார்வலர்களாகிய நீங்கள் உங்களிடம் பயிலும் மாணவர்களிடம் பாகுபாடு காட்டாமல் அன்போடு நடந்து கொள்ள வேண்டும்.மேலும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்து கற்றல் கற்பித்தல் செயலில் ஈடுபட வேண்டும் என்றார்.
முன்னதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி அவர்கள் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி குடியிருப்பு பகுதியை சேர்ந்த தொண்டைமாநகர்,அம்பாள்புரம் 1 ஆம் வீதி,திலகர் திடல் ஆகிய பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள் சுபலெட்சுமி,நிர்மலா,நஸ்ரின் ஆகியோரிடம் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களுக்குரிய கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வழங்கினார்.பின்னர் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தன்னார்வலர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
நிகழ்வின் போது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா,திமுக நகரச் செயலாளர் நைனா முகமது,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் தங்கமணி,பள்ளித்துணை ஆய்வாளர் குருமாரிமுத்து,புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் செங்குட்டுவன்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் கமலக் கண்ணன், பள்ளித்தலைமையாசிரியர் விஜயமாணிக்கம்,இல்லம் தேடி கல்வி திட்ட
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார்,முனியசாமி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Attachments area