வல்லதிராகோட்டை மற்றும் பாலையூர் பாத்தம்பட்டி வடகாடு எல் என் புரம் மேற்பனைக்காடு ஆகிய பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வல்லதிராகோட்டை மற்றும் பாலையூர் பாத்தம்பட்டி வடகாடு எல் என் புரம் மேற்பனைக்காடு ஆகிய பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது பின்னர் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 69 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சியினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் விவசாயிகள் அதிகமாக நெல் விளைச்சலை கண்டுள்ளார்கள் மேலும் விவசாயிகளின் கோரிக்கை கேற்ப கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிப்பதற்கு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை இணையதளம் வாயிலாக பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதன் பயனாக விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம் என மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் எம்.எஸ் தண்டாயுதபாணி ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில் நாயகி ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா செல்வம்ஒன்றிய கவுன்சிலர் ரத்தினவேல் கண்டியர் அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கண்காணிப்பாளர் மணிமாறன் மேலாளர் பொன்னுசாமி ஊராட்சி மன்ற தலைவர்கள் ரா. செல்வ ராஜசோழன் கன்சல் பேகம் பாலகிருஷ்ணன் பாதம்பட்டி அம்பலம் முருகையா மற்றும் அலுவலர்கள் ஊர் பொது மக்கள் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்