ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன்புதமிழ்புலிகள் கட்சியினர் காவல் துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்
ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன்புதமிழ்புலிகள் கட்சியினர் காவல் துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சண்முகவேல் புரம் 17வது வார்டில் வசித்து வருகிறார் தோழர் ஆட்டோ முருகன் வயது 44 இவர் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் மேலும் அதே பகுதியில் வசிக்கும் காமராஜ் மற்றும் சௌந்தர்ராஜ் என்பவரால் கொலைவெறி தாக்குதல் நடந்ததாக தெரியவருகிறது இதுதொடர்பாக தமிழ் புலிகளின் கட்சியினர் காவல் நிலையம் சென்று தாக்குதல் நடத்திய காமராஜன் மற்றும் சௌந்தரராஜன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய கோரியும் புகார் மனு அளித்துள்ளனர் அதன் அடிப்படையில் கடந்த 14ஆம் தேதி குற்றவாளிகள்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இதுவரையில் முருகன் என்பவரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திய இரண்டு நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி தமிழ் புலிகள் கட்சியை சார்ந்த திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மருதைபோஸ்,
தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது இதில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் மணி,மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சின்னக்கருப்பன்,இளம்புலிகள் அணி மாவட்ட செயலாளர் இரணியன்,திண்டுக்கல் தொகுதி செயலாளர் அறிவரசன்,பழனி ஒன்றிய செயலாளர் முருகானந்தம்,இளம் புலிகள் அணிச் செயலாளர் புலிப்பாண்டி,
ஆதித்தமிழர்கட்சி மாவட்ட செயலாளர் கல்லை ஈஸ்வரவேந்தன்,
தமிழர்சமூகநீதிகழக நிர்வாகிபாரதி, மேலும் அனைத்து இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து ஒட்டச்சத்திரம் காவல் நிலையம் முன்பு
காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் மேலும் சாலை மறியலில் தமிழ்ப்புலிகள் கட்சி
ஆதி தமிழர் கட்சி
தமிழர் சமூக நீதி கழகம் போன்ற இயக்கங்கள் இணைந்து சாலை மறியல் செய்தனர் இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லும்படி கூறிய காவலர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பின்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் பேச்சுவார்த்தை தோல்வி அடையவே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர் மேலும் இந்த சாலை மறியலால் ஒட்டன்சத்திரம் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.