ஆரணி அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது

Loading

ஆரணி அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆரணி அருகே சித்தேரி கிராமத்தில் உள்ள ஒரு கடையில் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிராமிய காவல் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமை யிலான காவலர்கள் விரைந்து சென்று மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த செல்வம் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 மதுபாட்டில்களையும், 4 பீர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

0Shares

Leave a Reply