சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி!

Loading

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி தெரியவந்துள்ளதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 3வது அலை பரவி வருவதையொட்டி கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் முககவசம் அணிவதுடன் சமுக இடைவெளியை கடை பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் கரோனா அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில்  கன்னியாகுமரிக்கு சென்று வந்த 45 வயது தலைமை காவலர் மற்றும் 28 வயது  பெண் காவலருக்கு சளி, காய்ச்சல் இருந்ததையொட்டி கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில்  நேற்று இருவருக்கும் கரோனா அறிகுறி தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் காவல் நிலைய பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து இருவரும் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

0Shares

Leave a Reply