கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ய முயன்ற 1 பெண் உட்பட 5 குற்றவாளிகளை கைது செய்து, 160 கிலோ கஞ்சா பறிமுதல்

Loading

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், இராயபுரம் பகுதியில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ய முயன்ற 1 பெண் உட்பட 5 குற்றவாளிகளை கைது செய்து, 160 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த இராயபுரம் உதவி ஆணையாளர் தனிப்படை காவல் குழுவினரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive Against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இராயபுரம் உதவி ஆணையாளர் தனிப்படையைச் சேர்ந்த N-1 இராயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் G.செல்வகுமார் தலைமையில், தலைமைக் காவலர்கள் K.ராஜவேல், (த.கா.35310), A.சரவணன் (த.கா.27354), முதல்நிலைக் காவலர்கள் A.செந்தில்குமார், (மு.நி.கா.29256), M.இளங்கோவன் (மு.நி.கா.31170), ஊர்க்காவல் படை வீரர்கள் S.காசி (HG 3256), M.கார்த்திக் (HG 4224) மற்றும் A.அரவிந்த் (HG 4217) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் நேற்று (13.01.2022) மாலை, இராயபுரம், பழைய NRT பாலம், ஶ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் பின்புறம் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒரு பெண் உட்பட 5 நபர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், கஞ்சா வைத்திருந்த 1. ரமணா வ/33, த/பெ.சின்னா, குப்பாரகூடம், நர்சிபட்டிணம், விசாகப்பட்டிணம், ஆந்திர மாநிலம், 2.சத்யவதி, பெ/வ.32, க/பெ.யோகராஜ் ரத்தினம், பேட்டை கிராமம், ரேணிகுண்டா, விசாகப்பட்டிணம், ஆந்திர மாநிலம், 3.மூவேந்தன், வ/29, த/பெ.கருப்பசாமி, திருநின்ற நகர் 2வது தெரு, புழல், சென்னை, 4.சுப்பிரமணி, வ/42, த/பெ.முத்துவேல், விநாயகபுரம், தண்டையார்பேட்டை, சென்னை, 5.சூர்யா, வ/29, த/பெ.விஜயகுமார், பல்லவன் நகர் 1வது தெரு, புது வண்ணாரப்பேட்டை, சென்னை ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 160 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், கைது செய்யப்பட்ட எதிரிகளில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ரமணா மற்றும் சத்யவதி ஆகியோர் ஆந்திராவில் மொத்தமாக கஞ்சாவை வாங்கி இரயில் மூலம் சென்னைக்கு வந்து, இராயபுரம் இரயில் நிலையம் அருகில் மற்ற எதிரிகள் மூவேந்தன், சுப்பிரமணி மற்றும் சூர்யா ஆகியோரிடம் கஞ்சாவை பிரித்து கொடுத்து, சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

இதில் எதிரிகள் ரமணா மீது ஆந்திர மாநிலத்திலும், சத்யவதி மீது திருவள்ளூர் மாவட்டத்திலும் கஞ்சா வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும், மூவேந்தன் மீது P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், சுப்ரமணி N-2 காசிமேடு காவல் நிலைய சரித்திரி பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 2 கஞ்சா வழக்குகள் உட்பட சுமார் 11 குற்ற வழக்குகளும், சூர்யா, N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது 2 கஞ்சா வழக்குகள் உட்பட சுமார் 7 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

சிறப்பாக செயல்பட்டு கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்த N-1 இராயபுரம் காவல் நிலைய காவல் குழுவினரை. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் இன்று (14.01.2022) நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

0Shares

Leave a Reply