மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் : இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் !

Loading

மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகள் : இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் !

மதுரையில் சர்வதேச தரத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ளது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம் என்ற பெயரில் அமைய உள்ள இந்த நூலகத்தில், 250 கார்கள் நிறுத்தும் வகையில் கீழ்தளம் அமைக்கப்படுகிறது. நூலக வளாகத்தில் 300 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது.

தமிழ், ஆங்கிலம், ஆன்மிகம் குறிப்பாக சைவம், வைணவம், சங்க இலக்கியம், மொழியியல், வாழ்க்கை சமூகம், அறிவியியல், ஆய்வு மாணவர்களுக்கான நூல்கள், மொழிபெயர்ப்பு, விருது பெற்றவர்களுக்கான நூல்கள், குடிமைப்பணிகளுக்கான நூல்கள், போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையிலான புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் படிக்க தேவையான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், வேலைவாய்ப்புக்கான நூல்கள் உள்பட இரண்டரை லட்சம் நூல்கள் வைக்கப்பட உள்ளன.

குழந்தைகளுக்கான படிப்பு அறைகள், நூல்கள் மற்றும் ஒளி-ஒலி காட்சி கூடம், டிஜிட்டல் அறைகள் ஆகியவை சர்வதேச தரத்தில் அமைய உள்ளன.

இந்நிலையில், நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை நேரலையில் தொடங்கி வைக்கிறார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *