திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்நேரில் ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சியில் , கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள காய்கறி மார்கெட்டின் இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா . முருகேஷ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . அ . பவன் குமார் ரெட்டி , இ.கா.ப. , கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி ) மு பிரதாப் ஆகியோர் உள்ளனர் .
திருவண்ணாமலை ராஜகோபுரம் அருகே , தேரடி வீதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா . முருகேஷ் , அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டு உள்ளதை நேரில் சென்று ஆய்வு செய்தார் . உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ பவன் குமார் ரெட்டி , கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி ) மு பிரதாப் ,ஆகியோர் உள்ளனர் .
திருவண்ணாமலை நகராட்சியில் , கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக காத்தி நகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள பூ கடை மார்கெட்டின் இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா . முருகேஷ் , அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ . பவன் குமார் ரெட்டி , கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி ) மு . பிரதாப் , ஆகியோர் உள்ளனர் .