கிணற்றுக்கு குளிக்க சென்ற பொழுது நீரில் மூழ்கி சிறுமி உயிர் இழப்பு
உளுந்தூர்பேட்டை. ஜன 10_
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் மகள் நித்திகா வயது 7 என்ற சிறுமி உட்பட மூன்று சிறுவர்கள்
கிணற்றின் மேல் பகுதியில் உள்ள சுற்றுப்பாதையில் குளிக்கும் போது திடீரென்று நித்திகா வயது 7 சிறுமி கிணற்றில் தவறி விழந்துவிட்டதாக உடன் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிச் சென்று வயல்களில்
வேலை செய்பவர்களிடம் நித்திகா கிணற்றில் விழுந்து விட்டாள் என்று தெரிவித்தனர்.
உடனே உறவினர்கள் மற்றும் வேலை செய்தவர்கள் கிணற்றில் மூழ்கி பார்த்து தேடியுள்ளனர் சிறுமி கிடைக்கவில்லை.
அதன் பின்னர் உளுந்தூர்பேட்டை தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கு சம்பவம் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து விரைந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுமியின் உடலை மீட்டனர்.
தண்ணீரில் முழுகி பரிதாபமாக உயிரிழந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.