15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறிய நபர் கைது…

Loading

15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அத்துமீறிய நபர் கைது…

சென்னை காசிமேட்டில் 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்த வெங்கடேசன் என்பவர் காசிமேடு ராயபுரம் அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்.

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரில் வசித்து வரும் தம்பதிகளான முருகன்-சரசு. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதல் இரண்டு மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், மூன்றாவது மகளான 15 வயது சிறுமி கடந்த 28 தேதியிலிருந்து வீட்டில் இருந்தவர் காணவில்லை என பெற்றோர் புகாரளித்தனர். புகாரை பெற்று கொண்டு வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவீரமாக தேடி வந்த நிலையில்,

காசிமேடு சிங்கார வேலன் நகர் 3வது தெருவில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, ஜோலார் பேட்டைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் வாடகை வீட்டில் தங்கி கட்டட வேலை பார்த்து வந்துள்ளனர்.

0Shares

Leave a Reply