டாஸ்மாக் பார் ஏலத்தில் முறைகேடு ஏதுமில்லை முற்றுகை போராட்டம் குறித்து அமைச்சர் பதில்

Loading

சென்னை, ஜன- 3-

மதுபான பார் ஏலம் முறைபடி தான் நடைபெறுகிறது,என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் முறைகேடு குற்றச்சாட்டுக்களை கூறுகிறார்கள் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்,

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் பார் ஏலத்தில் முறைகேடு நடைபெறுவதாக நடைபெற்ற போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அது குறித்து பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் பார் ஏலம் வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது, திமுக ஆட்சியில் மதுபான பார்களை ஏலம் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது, ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் 1715 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது கடந்த ஆட்சியில் நடந்தது போல் 66 விதிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது, யார் அதிக தொகைக்கு ஏலம் கேட்கிறார்களோ அவர்கள் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி உள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு வருவாய் வரக்கூடிய வகையில் ஏலம் விடப்பட்டு வருகிறது,

கடந்த ஆட்சியில் மதுபான பார ஏலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது, இப்போது அந்த முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை, அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக சமூகவலைதளங்களில் மதுபான வாரியத்தில் முறைகேடு நடப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்,

கடந்த அதிமுக ஆட்சியில் 3.5 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணைக் குழுக்கள் மூலமாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது, விசாரணைக்குழுக்களின் அறிக்கைகள் வெளியான பின்னர், தவறு செய்தவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

தமிழகம் முழுவதும் 8905 புதிய மின்மாற்றிகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம், அதில் 7833 மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளது,மீதமுள்ள 1072 புதிய மின்மாற்றிகள் மாற்றக்கூடிய பணி ஒரு மாத காலத்தில் முடியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கூறுவதுபோல் மின் கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி எதுவும் வசூலிக்கவில்லை கடந்த ஆட்சியில் பிற மின் சார்ந்த சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி ஏற்கனவே வசூலிக்கப்படுவது தற்போதும் தொடர்ந்து நடைபெறுகிறது, மின்கட்டணத்தில் புதியதாக ஜிஎஸ்டி வரி எதுவும் வசூலிக்கப்படவில்லை ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கக்கூடிய பணிகள் பயனாளிகளை அடையாளம் காணப்பட்டு முறையாக வழங்கப்பட்டு வருகிறது, வருகிற மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கும் இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுவிடும் தமிழக மின்வாரியத்திற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது, அதற்காக வாரியம் செலுத்தக்கூடிய வட்டி விகிதம் அதிகமாக இருக்கிறது, இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் தமிழக மின் வாரியத்தில் 2000 கோடி ரூபாய் அளவுக்கு சேமித்துள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்,

0Shares

Leave a Reply