ஜல்லிக்கட்டு போட்டியை நல்லமுறையில் நடத்த முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்: அமைச்சர் மூர்த்தி தகவல்

Loading

ஜல்லிக்கட்டு போட்டியை நல்லமுறையில் நடத்த

முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை, ஜன- 3-
கொரோனா தொற்று ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை நல்ல முறையில் நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில் வணிகவரி இணை ஆணையர்களின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மூர்த்தி கூறுகையில்
பதிவுத்துறையின் வருவாயை பெருக்கவும் அரசுக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி வரியை ஒழுங்காக செலுத்தவும் ஏமாற்றுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.வரி ஏய்ப்பு செய்பவர்களின் ஜிஎஸ்டி கணக்கை ரத்து செய்யவும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்து உள்ளோம்.வணிகவரித்துறையில் உள்ள 12 மண்டலங்களை 19 மண்டலங்களாக அதிகரிக்கவும் வணிகவரித் துறையில் ஆயிரம் பேருக்கு பணி உயர்வு கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.

வணிகவரித் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரிப்பதற்காக விரைவில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி குழு அமைக்கப்படும்.கொரோனோ பெரும் தொற்று பரவி வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது, சுகாதாரத்துறை மற்றும் சில துறையிலிருந்து

ஜல்லிக்கட்டு போட்டியின் போதுகட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொண்டுள்ளனர்.அதற்கிணங்க பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாப்பான முறையில் நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் நல்லமுடிவெடுப்பார் என்றார் அவர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *