தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி

Loading

தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டிக்கு குடியாத்தம் கே. எம். ஜி .கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் மண்டலங்களுக்கு இடையேயான ஆண்கள் குத்துச்சண்டை போட்டி ஆற்காடு அடுத்த கலவையில் உள்ள ஹிட் பிட் குத்துச்சண்டை கலைக்கூடத்தில் குத்துச்சண்டை போட்டி நடந்தது.

இதில் குடியாத்தம் கேஎம்ஜி கல்லூரியில் முதுநிலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் சு.விக்னேஷ் 93 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் தேசிய அளவில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஜலந்தரில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் பல்கலைக்கழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் வரும் 3ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவர் விக்னேஷ் தேர்வு பெற்றார். தேசிய அளவிலான போட்டிக்கு பஞ்சாப் செல்லும் விக்னேஷை கல்லூரி மேலாண்மை அறங்காவலர் கே. எம்.ஜி. பாலசுப்ரமணியம், தலைவர் கே.எம்.ஜி.சுந்தர வதனம், செயலாளர் கே.எம். ஜி.ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் மு.வளர்மதி, உடற்கல்வி இயக்குனர்கள் ரஞ்சிதம், ஞானகுமார் ஆகியோர் புதன்கிழமை பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.விக்னேஷ் தந்தை ஒரு மூத்த பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply