சசிகலாவுக்கு மன்னிப்பே இல்லை ஜெயகுமார் திட்டவட்டம்

Loading

சசிகலாவுக்கு மன்னிப்பே இல்லை
ஜெயகுமார் திட்டவட்டம்

சென்னை, டிச- 20-

அதிமுகவை பொறுத்தவரை சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறி்யுள்ளார்

சென்னை சேத்துப்பட்டு,ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய
சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் அதிமுக சார்பாக கிறிஸ்துமஸ் விழாவிற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் .ஜெயக்குமார் அளித்த பேட்டி
தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வதுதான்
தலைமைக்கு அழகு என்று குட்டிக்கதை சொன்ன ஓபிஎஸ் சசிகலாவைக் கட்சியில்சேர்க்கவேண்டும் என்று மறைமுகமாக சொல்கிறாரா..என்று செய்தியாளர்கள் கேட்டனர், அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

மனிதக் குலம் தோன்றியது முதல் தவறு செய்வது என்பது இயல்பு.ஆனால்அந்த தவறை திருத்திக்கொண்டு அதன் மூலம் மனிதனாக திருந்தி வாழ்வதுதான்உண்மையில் மனிதக் குலத்திற்குச் செய்கின்ற ஒரு சிறப்பு.அந்த அடிப்படையில்ஒரு பெருந்தன்மையை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும்.தவறு செய்தவர்கள் என்ற
வகையில் நாம் பார்க்காமல்,அந்த தவறை உணர்ந்தவர்கள்.தவறை உணர்ந்து இனிமேல்ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்ற அந்த அர்த்தத்தில் வருகின்றவர்களுக்குநிச்சயமாக மன்னிப்பு என்பது உண்டு.ஆனால் சசிகலாவுக்கு மன்னிப்பே
கிடையாது.இதில் ஒபிஎஸ்சும் உறுதியாக இருக்கிறார்.அவர்
குறிப்பிட்டது மனிதக் குலத்தில்ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும்.இதுதான் ஏசு
சொன்னது.மன்னிப்பு என்பது மனிதக் குலம் ஏற்றுக்கொண்ட விஷயம்.ஆனால் அதிமுகவை பொறுத்தவரை சசிகலாவுக்கு மன்னிப்பு என்பதேகிடையாது.அவரும் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

சசிகலாவைப்பொறுத்தவரையில் அதிமுக பெயரையோ கொடியையோ பயன்படுத்தக்கூடாதுஎன்று காவல் புகார்
அளித்துள்ளோம்.

இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர்
ஒப்புக்கொண்டுதானே இந்த புகாரை அளித்துள்ளோம்,

இதிலிருந்து ஒரு தெளிவான நிலைதெரிகிறது.ஒரே தெளிவான நிலைதான்.இபிஎஸ்- ஓபிஎஸ் ,மட்டுமல்ல: ,அதிமுகவின் ஒன்றறைகோடி தொண்டர்களும்ஒரே எண்ணத்தோடுதான் இருக்கிறோம்.சசிகலாவுக்கும் இந்த கட்சிக்கும்
சம்பந்தம் இல்லை.அவர்கள் இல்லாமல் கட்சி நன்றாக
போய்க்கொண்டிருக்கிறது.அவர் ( ஒருங்கிணைப்பாளர்) தினமலரில் வந்த கதையைச்சொல்கிறார் என்றால் நீங்கள் அதற்கு கண்,காது,மூக்கு வைத்து உருவம்அளிப்பது என்பது.நீங்கள் நினைக்கும் உருவம் கிடையாது.சசிகலாவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.பெருந்தன்மை என்பது அதிமுகவில் அனைவருக்கும் உண்டு.மக்களும்,அதிமுக தொண்டர்களும் ஒரு தேவையில்லாதசக்தி என்ற அடிப்படையிலே,நிராகரிக்கப்பட்ட சக்தியாக,பலவித முயற்சிஎடுத்து,எப்படியாவது கட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்று நினைத்து தோல்விஅடைந்த சக்தியை இதற்கு ஒப்பிட்டுப் பேசுவது சம்பந்தம் இல்லாத ஒன்று.ஒருங்கிணைப்பாளர் சொன்ன கதை பாமர,குடிமக்களுக்கு
பொருந்தும்.சசிகலாவுக்கு பொருந்தாது.. இவ்வாறு ஜெயகுமார் தெரிவித்தார்,

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *