மக்கள் குறைதீர்க்கும் நாள்

Loading

சேலம்:
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22/11/2021 மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 432 மனுக்கள் வரப்பெற்றன. இக்கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அந்தந்த துறை அலுவலர்களிடம் வழங்கி பொதுமக்களின் தகுதியான மனுக்களின் மீது, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதேபோன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 5 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சத்திய பால கங்காதரன், உதவி ஆணையர் (கலால்) தனலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சரளா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *