Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை நவம்பர் 09, 2021
![]()
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை நவம்பர் 09, 2021
சென்னை: பிலவ வருடம் ஐப்பசி 23 ஆம் தேதி நவம்பர் 09 ,2021 செவ்வாய்கிழமை.பஞ்சமி திதி பகல் 10.36 மணி வரை அதன் பின் சஷ்டி திதி. பூராடம் நட்சத்திரம் மாலை 04.59மணி வரை அதன் பின் உத்திராடம். சந்திரன் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. இன்று கந்த சஷ்டி முருகனை வழிபட துன்பங்கள் நீங்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று அற்புதமான நாள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமணம் காதல் விவகாரங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். திருமணமான தம்பதியர் இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்க உடல் நலம் நன்றாக இருக்கும். சந்தோஷமான நாள் இது. வேலை விசயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். சந்திராஷ்டமம் இருப்பதால் காரியத்தடைகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்றைய தினம் கடன் வாங்கவோ, கடன் கொடுக்கவோ வேண்டாம். ஜாமீன் கையெழுத்துப் போட்டு பணம் வாங்கித்தரவேண்டாம். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். உணவு விசயத்தில் கவனம் தேவை.
மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். களத்திர ஸ்தானத்தில் இருந்து உங்க ராசியின் மீது சந்திரன் பார்வை விழுகிறது. குடும்பம் குதூகலமாக இருக்கும். உற்சாகம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். பணவரவு அதிகமாக இருந்தாலும் விரைய செலவுகள் வரலாம் கட்டுப்படுத்துங்கள்.
கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் சந்தோஷமான நாள் குடும்பம் குதூகலமாக இருக்கும். உடல் நலம் அற்புதமாக இருக்கும். தினம் தினம் திருநாளே என்பது போல இன்றைக்கு சந்தோஷமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மன நிம்மதி உண்டாகும்.
சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் அதிகரிக்கும். குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களின் உடல் நலம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சந்தோஷமான நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது. வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காட்டுங்கள். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். வார்த்தைகளில் நிதானம் தேவை.
துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சந்தோஷ சம்பவங்கள் அதிகம் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். இன்றைய தினம் உங்க ராசிக்குள் இருக்கும் சூரியன்,செவ்வாயினால் கோபம் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை.பேச்சில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்களின் உடல் நலம் அற்புதமாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
விருச்சிகம்
உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சுக்கிரன் இருப்பதால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷத்தை கொடுக்கும். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அலுவலக வேலையில் கவனமாக இருக்கவும் வேலை செய்பவர்களுடன் உயரதிகாரிகள் பற்றி வீண் வம்பு பேச்சுக்கள் வேண்டாம் தவிர்க்கவும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் இருக்கிறார். உங்க அன்புக்குரியவர் உங்களை ஆக சந்தோஷப்படுத்துவார். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். சின்னச் சின்ன சஞ்சலங்கள் வரும். திடீர் செலவுகள் எட்டிப்பார்க்கும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. மனதில் ஏற்படும் குழப்பத்தை போக்க தியானம் செய்யுங்கள்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகமாக தேவையில்லாத செலவுகள் உங்களை கஷ்டப்படுத்தும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உங்களின் உடல் நலம் அற்புதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவருமானம் அற்புதமாக இருக்கும். எதிர்காலத்தை திட்டமிட இது நல்ல நாள். பணத்தை பத்திரப்படுத்தவும் விரைய செலவுகளைத் தவிர்க்கலாம். உங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வு பற்றிய நல்ல செய்தி தேடி வரும். உங்க வாழ்க்கை துணை மீது அன்பு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கினால் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பம் குதூகலமாக இருக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அற்புதமான நாள்.

