ரூ.1500 மதிப்புள்ள கவரிங் செயினை (ஆரம்) பறித்து கொண்டு தப்பி ஓடிய வாலிபர் கைது.
பாலக்கோடு, நவ.9 –
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வாணியர் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி பவித்ரா (வயது. 25) இவர் நேற்று தினம் இரவு 9 மணி அளவில் மாரண்டஅள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்,
அப்போது இவர் பின்னால் நடந்து வந்த வாலிபர் தீடிரென இவரது கழுத்தில் இருந்த ரூ.1500 மதிப்புள்ள கவரிங் செயினை (ஆரம்) பறித்து கொண்டு தப்பி ஓடினார், பவித்ரா திருடன், திருடன் என அலறினார், அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திருடனை விரட்டி பிடித்து மாரண்டஅள்ளி போலீசில் ஒப்படைத்தனர்,
போலீசார் விசாரித்ததில் பஞ்சபள்ளி அருகே உள்ள ஏரி பஞ்சபள்ளியை சேர்ந்த ராமப்பன் மகன் சாம்ராஜ் (வயது. 35) என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவனை கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெண்ணின் கழுத்தில் செயினை அறுத்து தப்பி ஓடி முயன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.