மாண்புமிகு தொழில்துறை , தமிழ் ஆட்சிமொழி தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு . தங்கம் தென்னரசு அவர்களால் விருது வழங்கப்படவுள்ளது

Loading

கல்விக்கழகக் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம் சார்பில் வழங்கப்படும் 2020 – ஆம் ஆண்டுக்கான தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்கு வேலூர் மாவட்டம் , குடியேற்றம் தமிழ்ச் செம்மல் புலவர் வே . பதுமனார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

இவ்விருது 2021 நவம்பர் 8 – ஆம் நாள் சென்னை , கோட்டூர்புரம் , தமிழ் இணைய கலையரங்கில் நடைபெறவுள்ள தமிழ் அகராதியியல் நாள் விழாவில் மாண்புமிகு தொழில்துறை , தமிழ் ஆட்சிமொழி தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு . தங்கம் தென்னரசு அவர்களால் வழங்கப்படவுள்ளது எனச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *