காஸ் சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு.. மீண்டும் விறகு அடுப்பை நோக்கி மக்கள்: ராகுல் காந்தி விமர்சனம்

Loading

காஸ் சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு.. மீண்டும் விறகு அடுப்பை நோக்கி மக்கள்: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: காஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல லட்சம் ஏழைக் குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்பு பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் . தீபாவளிக்கு முன்பாக அதாவது நவம்பர் 1ஆம் தேதி வர்த்தக சிலிண்டர் விலை சிலிண்டர் ஒன்றுக்கு 266 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம்தான் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் உயர்வு அடைந்திருந்தது.

சிலிண்டர் விலை தொடர்ச்சியாக பல மாதங்களாக உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில்தான் ஹிந்தி மொழியில் வெளியான ஒரு செய்தி வெப்சைட்டில் , மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட பகுதிகளில், 42% கிராம மக்கள் தங்களது காஸ் இணைப்புகளை பயன்படுத்தாமல் பழைய முறையில் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
விறகு அடுப்பு அந்த கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ள ராகுல்காந்தி மேலும் கூறுகையில், பல லட்சம் மக்கள் விறகு அடுப்பு பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் . நரேந்திர மோடியின் முன்னேற்ற வாகனம் முன்னோக்கி செல்லாமல் பின்னே சென்று கொண்டுள்ளது. அதற்குப் பிரேக்கும் ரிப்பேராகி உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை தீபாவளியன்று மத்திய அரசும், பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து மகிழ்ச்சியை பரிசளித்தன. ஆனாலும் எல்பிஜி சிலிண்டரின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது. ‘தி டெலிகிராப்’ நாளிதழில் வெளியான செய்தியின்படி, ஜார்கிராம் மற்றும் மேற்கு மிட்னாபூரின் சுமார் 100 கிராமங்களில், 42 சதவீத மக்கள் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் கீழ், மக்களுக்கு இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டதாக மோடி அரசு தெரிவிக்கும் நிலையிலும், இதுதான் நிலவரம் என அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

அடுத்த அதிர்ச்சி! எகிறிய கேஸ் சிலிண்டர் விலை.. கலக்கத்தில் வியாபாரிகள்!

குறிப்பிட்ட பகுதிகள் ஜார்கிராம் மற்றும் மேற்கு மிட்னாபூரின் 13 தொகுதிகளில் உள்ள 100 கிராமங்களில் 560 வீடுகளை ஆய்வு செய்ததாக கணக்கெடுப்பின் தலைவராக இருந்த பிரவத் குமார் தெரிவித்ததாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது எரிவாயு விலை அதிகரிப்பு, இரண்டாவது கிடைக்கும் தன்மை மற்றும் மூன்றாவது மக்களின் வருமானம் குறைந்தது ஆகியவையாகும். விலைவாசி உயர்வு பணவீக்கத்தின் தாக்கம் அனைத்து தரப்பு மக்களாலும் எதிர்கொள்ளப்பட்டாலும், விவசாயிகளுக்கு இது மிகவும் கடினமாகிவிட்டது. குறிப்பாக டீசல் விலை உயர்வால் விவசாயிகளின் கவலை அதிகரித்துள்ளது. டீசல் விலையை அரசு குறைத்தாலும் அது நிரந்தரமில்லை. சீக்கிரமே மீண்டும் விலை உயர்ந்துவிடும் என்ற பயம் மக்களிடம் உள்ளது. விலையை குறைத்தாலும் செப்டம்பர் மாதத்தில் இருந்த விலையைதான் இப்போது பெட்ரோல், டீசல் விலை எட்டியுள்ளதே தவிர பெரும் குறைப்பு என்று இதை கூறிவிட முடியாது.

0Shares

Leave a Reply