பொள்ளாச்சி சம்பவம் போல பெண்களை சீரழித்த தொலைக்காட்சி செய்தியாளர் – பாலியல் வழக்கில் கைது
பொள்ளாச்சி சம்பவம் போல பெண்களை சீரழித்த தொலைக்காட்சி செய்தியாளர் – பாலியல் வழக்கில் கைது
தஞ்சாவூர்: இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி தனிமையில் வரச்சொல்லி அனுபவித்து விட்டு ஏமாற்றிய பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை சீரழித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாகவும் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு போராடி வெற்றி பெற்றுள்ளார், பொள்ளாச்சி சம்பவம் போல பல பெண்களை அந்த நிருபர் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் செல்வி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) . கடலூர் மாவட்டம் சிதம்பர அருகே வல்லம்படுகையில் பெற்றவர்களுடன் வசித்து வரும் செல்வி பட்டப்படிப்பு படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்திற்கு வரன் பார்த்த போது திருமணத்தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். அதனைப் பார்த்து காட்டுமன்னார்குடி வட்டம் வடகுகுலக்குடியில் வசிக்கும் அலெக்சாண்டர் மகன் சரவணகுமார், 33 என்பவர் திருமண தகவல் மையம் மூலமாக செல்வியைத் தொடர்பு கொண்டார். ஜாதகம் போட்டோ வேண்டும் என வாட்ஸாப்பில் கேட்டார்.
இரு வீட்டாரும் பேசி நிச்சயம் முடிவான நிலையில் செல்வியைத் தொடர்பு கொண்ட சரவணன் தொலைபேசியில் பேசுங்கள் தவறில்லை என கூறினார். கல்யாணம் பண்ண தானே போறோம் என்று கூறி பேச சொன்னார். ஒரு நாள் தனிமையில் இருந்த போது இரவில் பேசி அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோ அனுப்ப சொல்லி கேட்டார். சரவணனும் போட்டோ அனுப்பி வைத்திருக்கிறார். இதையே வாடிக்கையாக வைத்திருந்தாராம் சரவணன்.
ஏமாற்றிய நிருபர் தனியாக சந்திக்க வேண்டும் என்று ஒருநாள் தஞ்சாவூருக்கு வரச்சொன்னார். அதை நம்பி செல்வியும் செல்லவே, கட்டாயம் திருமணம் செய்வேன் என உறுதி அளித்து பலவந்தப்படுத்தி உறவு கொண்டார். இதே போல் அடிக்கடி தனியாக சந்திக்க கூப்பிட்டு உறவு கொண்டதோடு அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டாராம். சில நாட்களுக்குப் பிறகு திருமணம் பற்றி செல்வி பேசவே, வரதட்சணை போதவில்லை என்று சொல்லி தட்டி கழித்தார். பிறகு அவரது வீட்டில் பேசியும் எந்த பயனும் இல்லை. அவரைப்பற்றி விசாரித்த போது தான் அதிர்ச்சியான உண்மை செல்விக்கு தெரியவந்தது.
பாலியல் வழக்கு பதிவு சரவணன் அதை ஏற்று எழுதி கொடுத்து ஒரு மாதம் அவகாசம் வாங்கி சென்றார். ஆனால் திருமணம் நடக்கவில்லை. சரியான நீதி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால், பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் செல்வி. இதன் பிறகு 420, 417 ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது. ஆனால் சரவணன் கைது ஆகாமல் ஜாமீன் பெற்று விட்டார்.
மிரட்டிய சரவணன் செல்வியின் சட்டப்போராட்டம் ஓயவில்லை. காவல்துறை கண்காணிப்பாளர், டிஜிபி அலுவலகம், உள்துறை செயலளர் என மனு அனுப்பி முறையிட்டார். இதனையடுத்து சரவணன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு பிறகு செல்வியைத் தொடர்பு கொண்ட சரவணன் புகாரை வாபஸ் வாங்க சொல்லி மிரட்டினார். முகத்தில் ஆசிட் ஊற்றுவேன், பெட்ரோல் உத்தி எரித்து விடுவேன் என்றும், என்னுடைய நிர்வாண போட்டோவை சமூக வலைத்தளங்களில் போடுவேன் என்றும் செல்வியை மிரட்டியதாக தெரிகிறது.
கைதான நிருபர் இதனையடுத்து செல்வி, நீதிமன்ற படியேறினார். இதனையடுத்து சரவணன் மீது 341, 294B, 506(2) ன் கீழ் வழக்கு போடப்பட்டது. இதன் இடையே முன் ஜாமீன் கிடைக்க வில்லை என்றதும், மோனிகா என்ற பெண்ணை சரவணன் திருமணம் செய்ய ரகசிய ஏற்பாடு நடந்து வந்தது. இதனையடுத்து சரவணன் தலைமறைவானார். டிஜிபி, வடக்கு ஐஜி அகியோரிடம் புகார் கொடுத்தார் செல்வி. மோனிஷாவை ரகசியமாக கோயில் வைத்து தாலி கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிதம்பரம் நகர காவல் நிலைய போலீசார் உளுந்தூர்பேட்டை அருகே அக்டோபர் 25ஆம் தேதியன்று சரவணனை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்துள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவம் ஒரு மாதம் தலைமறைவாக இருந்த பிறகு தான் பிடிபட்டுள்ளார். தனக்கு உதவிய மற்றும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும், காவல்துறைக்கும் எனது நன்றிகள். என்று கூறியுள்ளார் செல்வி. சரவணனின் உண்மையான முகம் வெளி வந்தால், அவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் புகார் கொடுக்க முன் வருவார்கள். பொள்ளாச்சி சம்பவத்துக்கு இணையான இந்த செயலின் பின்னணி உள்ள சரவணனின் உண்மை முகத்தை முழுமையாக வெளியே கொண்டுவர வேண்டுமென்ற எனது சட்ட போரட்டத்திற்கு உதவுங்கள் நன்றி என்று செல்வி கூறியுள்ளார். இதுபோன்ற நபர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டவேண்டும் என்றும் செல்வி தெரிவித்துள்ளார்.