பட்டாசுகள் வெடிப்பது குறித்த தீயாணைப்பு துறையினர் செயல் முறை விழிப்புணர்வு

Loading

பாலக்கோடு அரசு மேல்நிலை பள்ளியில் விபத்தில்லா முறையில் தற்காப்பு, பட்டாசுகள் வெடிப்பது குறித்த தீயாணைப்பு துறையினர் செயல் முறை விழிப்புணர்வு

பாலக்கோடு.அக்.30-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் விபத்தில்லாமல் தற்காப்பு முறையில் பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். அதனை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், தீவிபத்து காலங்களில் தீக்காயம் ஏற்பட்டவரை எவ்வாறு காப்பது, முதலுதவி செய்வது, தீயை அணைப்பது போன்ற விழிப்புணர்வு செயல் விளக்கம் நிகழ்ச்சி நடத்தப் பட்டது, மேலும் தீபாவளி பண்டிகையில் பட்டாசு, மத்தாப்புகள் வெடிப்பது குறித்தும் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டியும் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் பேசுகையில் பெரியவர்கள் கண்காணிப்பில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும், நீண்ட ஊதுபத்தி உபயோகித்து பட்டாசுகளை கொளுத்த வேண்டும், வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், எரிந்து முடிந்த மத்தாப்புகளை தண்ணீர் உள்ள வாளிகளில் போட வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டுப்பிரசுரங்களை மாணர்வர்களுக்கு வழங்கினார்.
அதனை தொடர்ந்து கம்பி மத்தாப்பு கொண்டு இடைவெளி கடைப்பிடித்தும் மத்தாப்புகளை கொளுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *