போடிமெட்டு மலைச்சாலை மயானப் பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்
தேனி மாவட்டம் போடி தமிழக-கேரள எல்லையை பிரித்து இணைக்கும் மையப்பகுதியாக போடிமெட்டு மலை உள்ளது.
போடிமெட்டு அருகே மணப்பட்டியும் சேர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கே வனப்பகுதி தவிர்த்து காப்பி மிளகு ஆரஞ்சு போன்ற பல வகையான விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்பகுதி பொது மக்களிடம் நிகழும் இறப்பு நேரங்களில் பிரேதத்தை சுமந்து கொண்டு அருகே உள்ள மணப்பட்டி மெயின் ரோட்டில் 300மீட்டர் தூரம் நடந்து சென்று மயானத்தில் எறியூட் டுவதும்,புதைப்பதும் போன்ற நிகழ்வு களை முடித்து கொள்வார்கள்.
கடந்த 2005ம் ஆண்டில் சுப்பிரமணி என்பவர் அந்த மயானச் சாலையில் 20 சென்ட் இடத்தை விலைக்கு வாங்கி அங்கேயே வீடு கட்டி கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் பொதுமக்கள் பிரேதத் தை கொண்டு செல்லும் போது பாதையில் யாரும் வரக்கூடாது என வழி மறிப்பதும், தோட்டங்களுக்கு செல்கின்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிக ளையும் கூலி தொழிலாளர்களையும் விடாமல் திருப்பி விரட்டி விடுவதையும் தொடர்ச்சியாக செய்து வந்தார்.
இதனால் மணப்பட்டி, போடிமெட்டு மலைக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது பிரச்சனை நடந்தே வருகிறது.பின்னர் 2010 ஆண்டு பாதையை படிப் படியாக ஆக்கிரமித்து முழுமையாக பங்களா முன் அமைக்கும் பெரிய கேட்போல அமைத்து யாரும் போக முடியாமல் செய்து தனி ராஜியமாக மாற்றி வைத்து கொண்டார்.
இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கூலி தொழிலாளர்கள் என யாரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மயானப் பாதையை பயன்படுத்த முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர் விவசாயிகளும் வேறு தோட்டப்பகுதிகளுக்குள் கெஞ்சி கதறி அறைகுறையாக விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் பிரேதத்தை புதைக்கவோ, எறிக்கவே இடம் இல்லாமல் மெனக்கெட்டு ஆம்புலன்ஸ் பிடித்து போடி நகராட்சி சாந்தி வனத்திற்கு கொண் டுவர வேண்டிய கட்டாய சூழலில் மாட்டி கொண்டு மன உளைச்சல் அடைந்து பணம் மற்றும் கால விரயத்தில் மாட்டி சிக்கி கொண்டு தவித்து வந்தனர்,
இந்நிலையில் மணப்பட்டி போடி மெட்டு பகுதி மலைக்கிராம பொதுமக்கள் போடி மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி, போடி வருவாய்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில் ஆக்கிரமிப்பாளர் சுப்பிரமணி போடி கோர்ட்டில் என்னுடைய இடம் என்று வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்ததில் முறையான உண்மையான ஆவணங் கள் ஒப்படைக்காததால் நெடுஞ்சா லைத்துறையிலும், வனத்துறை இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளது என தெரிய வந்ததால் ஆக்கிரமிப்பை அகற்றிட உத்தர விட்டது .அதன் அடிப்படையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பாக போடி தாசில்தார் செந்தில்முருகன் தலைமையில் சென்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்பு ப குதிகளை வரை படம் கொண்டு ஆய்வு செய்து குறியீடுகள் அமைத்து ஆக்கிரமிப்பு உறுதி செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தார்.இதற்கிடையில் முதற்கட்டமாக கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தடையாக இருந்த பெரிய கேட்டினை எடுத்து அப்புற ப்படுத்தினர்.
அதன்படி மயானச்சாலை ஆக்கிர மிப்பினை அகற்றி எடுக்க நெடுஞ்சாலைத்துறை வருவாய் துறை காவல் துறை சேர்ந்து இன்று மணப்பட்டிக்கு ஜேசிபி இயந்திரத்துடன் சென்று 50 மீட்டர் அளவு ஆக்கிரமிப்பை அகற்றி மண்பாதையாக மாற்றினர்.
அடுத்து ஆக்கிரமிப்பாளர் சுப்பிரமணி பகுதிக்கு செல்லும் போது அதற்குள்ள குறுக்கே பெரும் பள்ளத்தை தோண்டி வைத்து யாரும் வரக்கூடாது என விரட்டி அதிகாரிகள் உட்பட பலரையும் மிரட்டி தகாத வார்த்தைகள் பேசி தகரா றில் இறங்கினார்.அப்போது அங்கிருந்து பொதுமக்களுடன் சுப்பிரமணி குடும்பத்தினர் மற்றும் பலர் சேர்ந்து வாக்குவாதத்தில் இறங்கியதால் தகராறாக மாறி ஒரு வொருக்கொருவர் அடித்து மல்லுக்கட்டி ஏலத்தோட்டத்திற்குள் விழுந்தனர். ஒரு புறம் வாக்குவாதம் அதிகரித்து சுப்பிரமணியுடன் சேர்ந்து மல்லுக்கட்டி தரையில் உருண்டதால் பரபரப்போடு பெரும் பதட்டமும் உருவானது. குரங்கணி சார்பு ஆய்வாளர் ராஜசேகர் போடி வனத்துறையை சேர்ந்த பெத்தனசாமி இரு தரப்பையும் எச்சரித்து மிரட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.ஆனால் தொடர்ந்து பள்ளம் தோண்டப்பட்ட இடத்தை ஜேசிபி இயந்திரத்தில் மூடப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் இப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டு மோசமான சூழ்நிலை உருவானது.பாதிக்கப்பட்டு கொதித்து போன மலைகிராம மக்கள் கூறுகையில் மணப்பட்டியில் பாரம்பரியமாக 1.80 ஏக்கர் அளவில் அரசு நிலத்தில் மயானம் உள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்திவரும் நிலையில் சுப்பிரமணி திடீரென 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து கேட் போட்டு அடைத்துக் கொண்டு விட்டதால் பிணத்தை எரிக்க முடியாமலும் புதைக்க முடியாமலும், விவசாய வேலைக்கு செல்ல முடியாமலும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளோம் .கோர்ட்டு உத்தரவிட்டு ஆக்கிரமிப்பை அகற்றும் இடத்தில் பள்ளம் தோண்டி சுப்பிரமணி தகராறு செய்வது மோசமான செயலாகும்.
இந்த பாதையில் பல இடங்களில் விவசாயிகள் 500 சதுர அடி பட்டா நிலத்தை தானமாக கொடுத்து முக்காலடி பாதையில் அதுவும் உள்ளது என குறிப்பிட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல் படாமல் இருக்கும் மயானத்தை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அதிகாரியிடம் கேட்ட போ து தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது பாதி இடம் தற்போது அகற்றாமல் நி றுத்தப்பட்டுள்ளது இதுகுறித்து மாவ ட்டத்திற்கு தகவல் தெரிவித்து மேற் கொண்டு ஆக்கிரமிப்பு எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுத லில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் சீதாராமன், பிரவீன் குமார், போடி வருவாய் ஆய்வாளர் சண்முகம்,கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி உதவியாளர்கள் முத் துகுமார், தங்கவேல் மற்றும் போலீசார் பலரும் கலந்து கொண்டனர். பின்னர்
வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுப்பிரமணி தோண்டிய குழிகளை ஜேசிபி இயந்திரங்களால் மூடி மயானம் வரை மண் பாதையை உருவாக்கி இதனால் அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் 15 வருடங்களுக்கு பின்பாக பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் தங்களின் நன்றியை தெரிவித்தனர்