குறிப்பிட்ட ஒரு சாதிக்கும் சமூகத்திற்கும் அதிமுக செல்வது என்று சொன்னால் கேபி முனுசாமி என்னும் ஒரு தொண்டன் இறந்துவிட்டான் என்று அர்த்தம் கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி ஆவேச பேட்டி

Loading

குறிப்பிட்ட ஒரு சாதிக்கும் சமூகத்திற்கும் அதிமுக செல்வது என்று சொன்னால் கேபி முனுசாமி என்னும் ஒரு தொண்டன் இறந்துவிட்டான் என்று அர்த்தம் கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி ஆவேச பேட்டி

கிருஷ்ணகிரி நகரில் அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழாவை அடுத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கழக நிர்வாகிகள் ஆலோசனை செய்வார்கள் என தெரிவித்திருப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த முனுசாமி ஏற்கனவே தெளிவாக முடிவு எடுக்கப்பட்டு விட்டது கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சசிகலாவை சேர்க்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக கேள்வி எழவில்லை சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் இபிஎஸ் மூலம் நீக்கப்பட்டுள்ளனர் எந்த சூழ்நிலையிலும் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு கிடையாது முடிந்த ஒரு விஷயத்திற்கு ஊடகங்கள் கமா போட்டு மீண்டும் தொடர்ந்து வருகிறது என்றும் தெரிவித்த அவர் திருமதி சசிகலா அவர்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றி பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்தபோது கட்சியில் எந்த தலையீடும் செய்ய மாட்டேன் அக்காவிற்கு சேவை செய்ய மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் தற்போது அரசியலில் தலையிட்டு வருவது சசிகலா அக்காவுடன் வியாபார ரீதியாக இருந்தார் என்பதை காட்டுகிறது. என்றும் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தவத்தின் காரணமாக தனக்கென்று ஒரு கொள்கை கொண்டு அவரது குடும்பம் இந்த இயக்கத்தை கையில் எடுக்கும் நிலையில் எம்ஜிஆர் அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை தொடங்கி அண்ணாவின் உண்மையான தொண்டர்களையும் அவரது சிந்தனை கொள்கைகளை காப்பாற்றினார் அன்றைக்கு சாதி மதம் வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் எதுவுமில்லை அண்ணாவின் கொள்கைகள் மட்டுமே முன்வைத்து தியாக வோலி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் செயல்பட்டு வந்தனர் இப்படிப்பட்ட இந்த இந்த இயக்கம் குறிப்பிட்ட சாதிக்கும் சமூகத்திற்கும் செல்வது என்று சொன்னால் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா இறந்தார்கள் அதேபோல் சாதாரண தொண்டனாக கேபி முனுசாமி இறந்துவிடுவான் என்று அர்த்தம் இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை என ஆவேசத்துடன் பதிலளித்தார்

மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசும் போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது பக்குவமான உரை நிகழ்த்தினார் எனது அரசு அல்ல நமது அரசு என்றும் எதிர்க்கட்சிகளும் பாராட்டும் வகையில் இருக்கும் என்று பேசினார் ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது இருக்கிறது சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் எப்படி நடந்ததோ அதே போல் தான் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடந்திருக்கிறது முதலமைச்சர் இரு முகத்தோடு செயல்படுகிறார் ஒரு முகம் சட்டமன்றத்தில் பேசியது மற்றொரு முகம் உள்ளாட்சித் தேர்தல் நடத்திய விதம் மக்களிடம் நற்பெயர் பெற வேண்டுமென்றால் முதலமைச்சர் ஒரு முகத்துடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *