பத்திரிகையாளர்களே ஏமாறும் முன் விழித்துக்கொள்ளுங்கள்
![]()
பத்திரிகையாளர்களே ஏமாறும் முன் விழித்துக்கொள்ளுங்கள்
சங்கம் என்ற போர்வையில் பத்திரிகையாளர்களுக்கு உதவ வேண்டுமே தவிர அவர்களுக்கு அவார்டு தருவதாக கூறி ஒரு நபருக்கு 5000 ரூபாய் வாங்கிக்கொண்டு கேடயம் கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தி பணம் சம்பாதிக்கும் கும்பல் தமிழ்நாட்டில் உருவெடுத்துள்ளது வாட்ஸ்அப் பேஸ்புக் சமூக தளத்தில் போலியாக பதிவிட்டு பணத்தை சுரண்ட ஆரம்பித்துள்ளனர் . கொரோனா காலத்தில் பத்திரிகையாளர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இப்படி பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சங்கம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியாமல் பணம் சம்பாதிப்பதில் முனைப்பு காட்டுகின்றனர் நலிந்த பத்திரிகையாளர்களுக்கு உதவுவதை தவிர்த்து அவர்கள் இடத்திலேயே பணத்தைப் பிடுங்கி ஒரு வருடத்துக்கு உண்டான பணத்தை வைத்துக்கொண்டு மது குடிப்பதும் ஜாலியாக சுற்றுவதும் இதுபோன்ற நபர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 90 சதவீத சங்கங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள். மேலும் சங்கத்தை புதுப்பிக்காமலும் . பதிவே இல்லாமல் பத்திரிக்கையாளர்களை ஏமாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர் . தமிழ்நாடு அரசும், காவல்துறையும் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்குமா?
நாட்டில் ஒரு கும்பல் திருடி பிழைக்கின்றது, இன்னொரு கும்பல் ஏமாற்றி பிழைகின்றது ஏழை வர்க்கம் உழைத்து வாழ்கின்றது. நாட்டில் ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று தான் இதற்கு விடிவு காலம் வருமோ ஐயகோ…
