காரைக்கால்: பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை… பதற்றம் – 144 தடை உத்தரவு

Loading

காரைக்கால்: பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை… பதற்றம் – 144 தடை உத்தரவு

காரைக்கால்: திருநாள்ளாறில் பாமக மாவட்ட செயலாளர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கலவரம் பதற்றத்தை தடுக்கும் வகையில் திருநள்ளாறில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் பெயர் நேசமணி என்பதாகும். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த இவர், திருநள்ளாறு தொழிற்சாலைகள் சங்க கௌரவ தலைவராகவும் பதவி வகித்து வந்தார். நேசமணி நேற்றிரவு திருநள்ளாறு தேரடி பகுதியில் அமைந்து பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தை இரவு பூட்டிவிட்டு உதவியாளருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்துள்ளார்.
அவரை எதிர்பார்த்து காத்திருந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தை மறித்து சரமாரியாக வெட்டினர். நேசமணியின் கை, தலை மற்றும் உடலில் வெட்டுபட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தேவமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேசமணி படுகொலை செய்யப்பட்டதை அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தேவமணியின் சடலத்தை கைப்பற்றிய காரைக்கால் மாவட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநள்ளாறு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக கூலிப்படையை வைத்து யாரோ கொலை செய்திருக்கலாம் போலீஸ் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேவமணி மீது ஏற்கனவே பலமுறை கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதால் திருநள்ளாறு பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாமக காரைக்கால் மாவட்ட செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த அவருடைய ஆதரவாளர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதற்றம் கலவரத்தை தடுக்கும் வகையில் திருநள்ளாறில் 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். கொலை செய்யப்பட்ட தேவமணியின் உடல் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனை, தேவமணி வீடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *