வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக பனை விதை நடும் விழா.
வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக பனை விதை நடும் விழா.
வேலூர் அக்டோபர் 18
*மனிதர்களே மனிதர்களே என் விதையை ஒருமுறை மண்ணில் விதைத்து விடுங்கள் மூன்று தலைமுறைக்கு உங்களுக்கு நான் விருந்து அளிக்கிறேன்.*
வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக நமது பாரம்பரிய மரமான பனை மர விதைகள் *5000* எண்ணிக்கை நடும் விழா.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் நேற்று குண்டு சுடும் பயிற்சி தளமான சலமநத்தத்தில் 700 காவலர்களுடன் இணைந்து மலைப் பகுதியில் மண் அரிப்பைத் தடுக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும், மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுடன் இணைந்து 5000 பனை விதைகளை ஒரே நேரத்தில் வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக நடப்பட்டது.