*வானூர் அடுத்த பட்டானூர் பகுதியில் முன்விரோத தகராறு காரணமாக கொலை 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.*
![]()
புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியை சார்ந்தவர் பிரபல ரவுடி சுந்தர் இவரது தந்தை மணி வயது 58 இவர் புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார் இவர் ஆயுதபூஜை என்பதற்காக தான் வேலை செய்யும் இடத்தில் பூஜை செய்துவிட்டு திரும்பும்போது 10 பேர் கொண்ட கும்பல் அவரை பயங்கர ஆயுதத்துடன் வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் தகவலறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர் மேலும் விசாரித்ததில் புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி மாந்தோப்பு சுந்தர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுந்தர் என்பவரை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காக அவரது தந்தையை மணி என்பவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர் மேலும் இந்த கொலை குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

