பூந்தண்டலம் ஊராட்சியில் 409 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சான்றிதழ் வாங்கிய தலைவர்

Loading

பூந்தண்டலம் ஊராட்சியில் , தி.மு.க. , சார்பில் சாந்தி செல்லப்பனும் , அ.தி.மு.க. சார்பில் ஞானப்பிரகாசம் என்பவரும் போட்டியிட்டனர் . ஓட்டு எண்ணிக்கையில் , ஞானபிரகாசம், 2,994 ஓட்டுகளும் , சாந்தி செல்லப்பன் , 2,585 ஓட்டுகளும் பெற்றனர் . 409 ஓட்டுகள் வித்தியாசத்தில் , ஞானபிரகாசம் வெற்றிபெற்றார் . ஆனால் , இந்த வெற்றியை அறிவிக்காமல் தேர்தல் நடத்தும் அதிகாரி காலம் தாழ்த்தினார் . வெற்றி பெற்ற ஞானபிரகாசத்தின் ஆதரவாளர்கள் , தேர்தல் நடத்தும் அலுவலர் அறையை முற்றுகையிட்டு , வெற்றியை அறிவிக்க வேண்டும் என , வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . அதேநேரத்தில் , மறு ஓட்டு நடத்தக்கோரி , தி.மு.க. , வினர் , மனு அளிக்க வந்தனர் . 409- ஓட்டுகள் வித்தியாசம் இருந்தும் , எப்படி மறு ஓட்டு எண்ணிக்கை கேட்பார்கள் என , வாக்குவாதம் செய்தனர் . போலீசாருக்கும் , அ.தி.மு.க. , வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது . இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது இறுதியில் , கடும் போராட்டத்திற்கு பின் ஞானப்பிரகாசம் வெற்றிப் பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது . ஆனாலும் வெற்றி பெற்ற சான்றிதழை உடனே வழங்காததை கண்டித்து அப்பகுதியில் தேர்தல் அதிகாரி மீது மக்கள் குற்றம் சாட்டினர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *