‘‘அனைவருக்கும் பிராட்பேண்ட் – பிரதமரின் விரைவு சக்தி நடவடிக்கையின் முக்கிய அம்சம்’’

Loading

கட்டுரையாளர்கள்:
1. அசோக் குமார் மிட்டல், தொலை தொடர்புத்துறை ஆலோசகர் மற்றும் 1984ம் ஆண்டு ஐடிஎஸ்
அதிகாரி.
2. ஹரி ரஞ்சன் ராவ் ஐஏஎஸ் , தொலை தொடர்புத்துறை இணைச் செயலாளர்.
புதுதில்லி, அக்டோபர் 15, 2021
பிரதமரின் விரைவு சக்தி எனப்படும், தேசிய உள்கட்டமைப்பு பெருந்திட்டம் (NMP), சுதந்திர
தினத்தில் பிரதமரால் அறிவிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே, விமானப்
போக்குவரத்து, எரிவாயு, மின் பகிர்வு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ்
அனைத்து வசதிகளையும், ஒரே பார்வையாக ஒருங்கிணைக்க இது முன்மொழிகிறது. வாழ்க்கை
மற்றும் வணிகத்தை எளிதாக்குவதை அதிகரிக்கவும், தடைகளை குறைக்கவும் மற்றும்
குறைவான செலவில் திறம்பட பணிகளையும் முடிக்கும் நோக்கில், விரிவான மற்றும்
ஒருங்கிணைந்த பல மாதிரி தேசிய போக்குவரத்து நெட்வொர்க்-ஐ ஊக்குவிக்க, இந்த
ஒருங்கிணைக்கப்பட்ட தளம், இணைப்புக்கான இடம் சார்ந்த பார்வையை வழங்கும். தேசிய
உள்கட்டமைப்பு பெருந்திட்டம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், வெளிநாடு
முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் சுமூகமான போக்குவரத்து, சேவைகள் மூலம் நாட்டின்
உலகளாவிய போட்டியை அதிகரிக்கும் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். விரைவு சக்தி
திட்டம் தொடக்கம் மற்றும் திட்டமிடல் மற்றும் பயன்பாடுகளுக்கான முழுமையான அணுகுமுறை
தொடக்கம் ஆகியவற்றால், நமது நாடு மற்றொரு மிகப் பெரிய வளர்ச்சி நோக்கி செல்லவுள்ளது
மற்றும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவாக உள்ளது.
அனைத்து துறைகளின் முழுமையான வளர்ச்சிக்கு டிஜிட்டல் இணைப்பு முக்கியமானதாக
உள்ளது. நகர்ப்புறம் மற்றும் ஊரகம், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையே நிலவும்
டிஜிட்டல் வசதி குறைப்பாட்டை போக்கவும், மின்னணு நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, நிதி
உள்ளடக்கம் மற்றும் எளிதாக தொழில் செய்வது ஆகியவற்றை ஊக்குவிக்க நாடு முழுவதும்
பிராட்பேண்ட் இணைப்பை உருவாக்குவது அவசியம்.
இது மக்களின் சமூக – பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. அனைத்து உள்கட்டமைப்பு
துறைகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பு மிக முக்கியத் தேவையாக உள்ளது. தேசிய டிஜிட்டல்
தகவல் தொடர்பு கொள்கை – 2018, டிஜிட்டல் தகவல் தொடர்பு கட்டமைப்பு மற்றும்

சேவைகளை, நாட்டின் வளர்ச்சி மற்றும் நலனின் முக்கிய செயல்பாட்டாளர்களாகவும் மற்றும்
தீர்மானிப்பவர்களாகவும் அங்கீகரிக்கிறது.
அனைவருக்கும் பிராட்பேண்ட் வசதியை செயல்படுத்த, ‘தேசிய பிராட்பேண்ட் திட்டம்’ கடந்த
2019ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி தொடங்கப்பட்டது. டிஜிட்டல் தகவல் தொடர்பு
கட்டமைப்பின், விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தவும், குறைந்த செலவில் அனைவருக்கும்
பிராட்பேண்ட் வசதியை அளிக்கும் நோக்கில் இது தொடங்கப்பட்டது.
தேசிய பிராண்ட் பேண்ட் திட்டத்தின் நோக்கம்:
* கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் வளர்ச்சியை ஏற்படுத்த
அனைவருக்கும் உலகளாவிய மற்றும் சமமான பிராண்ட்பேண்ட் சேவைகளை அளித்தல்.
* நாடு முழுவதும் கண்ணாடியிழை கேபிள்கள் மற்றும் கோபுரங்கள் உட்பட டிஜிட்டல் தகவல்
தொடர்பு நெட்வொர்க் வடைபடத்தை உருவாக்குதல்.
* டிஜிட்டல் தகவல் தொடர்பு கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக
வேலைவாய்ப்பை ஊக்குவித்தல்.
இத்திட்டத்தின் கீழ் இது வரை செய்யப்பட்ட சாதனைகள்.
* இத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டபடி, இத்திட்டத்தை திறம்பட அமல்படுத்தவும் மற்றும்
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்தவும் அனைத்து
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்களின் மாநில பிராட்பேண்ட் குழுவை
உருவாக்கியுள்ளன.
* நாட்டில் உள்ள 6 கோடி கிராமங்களை கண்ணாடியிழை கேபிள் மூலம் இணைக்க பாரத் நெட்
திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 4.48 கி.மீ தூரத்துக்கு கண்ணாடியிழை
கேபிள் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.65 கிராம பஞ்சாயத்துகளுக்கு இந்த இணைப்பு
கொடுக்கப்பட்டுள்ளது. 1.04 கிராம பஞ்சாயத்துக்களுக்கு வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி
அளிக்கப்பட்டுள்ளது. 5.14 லட்சம் கண்ணாடியிழை எப்டிடிஎச் இணைப்புகள்
வழங்கப்பட்டுள்ளன.
* நாடு முழுவதும் பிராட்பேண்ட் இணைப்பு வழங்க பிரதமரின் வயர்லெஸ் நெட்வொர்க்
இன்டர்வேஸ் (PM-WANI) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 49,000
பிரதமரின் – வானி அணுகல் முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* 94 சதவீத கிராமங்கள் உட்பட, இந்தியாவின் 98 சதவீத மக்கள் 3ஜி/4ஜி செல்போன்
நெட்வொர்க் இணைப்பில் உள்ளனர்.
* நாடு முழுவதும் 6.78 லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* சென்னை – அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இடையே கடலுக்கு அடியில்
கண்ணாடியிழை கேபிள் இணைப்பு வழங்கப்பட்டும் தொலைத் தொடர்பு சேவை
மேம்படுத்தப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *