தலைவாசலில் பழங்குடியின மக்களுக்கு கைவினை பொருட்கள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

Loading

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், நாவக்குறிச்சி கிராமத்தில், இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் கைவினைப் பொருள்கள் தயாரிப்பதற்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை சேலம் மாவட்ட மலைக்குறவன் (பழங்குடியினர்) கல்வி மற்றும் பொருளாதாரம் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அவர்கள் செய்திருந்தார். முகாமில் மூங்கிலால் செய்யக்கூடிய கைவினை அலங்காரப் பொருட்கள், பர்னிச்சர்கள் போன்ற பொருட்களை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஏற்கனவே மூங்கிலில் கைவினை பொருள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை செய்து வருகின்றார்கள். ஆனால் தற்போது பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் பெருகி வரும் நிலையில் மூங்கிலால் செய்யப்படும் கூடை,முரம்,கட்டில்,நாற்காலி போன்றவை பெருமளவில் மக்கள் பயன்படுத்தாமல் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க மூங்கிலால் தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்த அவசியம் மற்றும் தேவைகள் போன்றவற்றை எடுத்துரைத்தும் அதை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பன குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கைவினைக் கலைஞருக்கான அரசின் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டையை சுமார் 100க்கும் மேற்பட்டோர்க்கு வழங்கப்பட்டு, அரசின் நிதியுதவியை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளான மூங்கிலை வனப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்து வர அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் முதுநிலை உதவி இயக்குநர் தனசேகரன், கேரளாவைச் சேர்ந்த கைவினை பொருட்களின் வடிவமைப்பு நிபுணர் ஆனந்த் சுதிர், பயிற்சியாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த கண்காணிப்பாளர் ஞானபாண்டியன், நாவக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply