உதகையில் மழைநீர் சேகரிப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Loading

உதகை அக்டோபர் 9:

நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு வாரத்தினை முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு வாரம் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையங்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வாகனத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

பொதுமக்கள் மழை நீரை வீணாக்காமல் சேமிக்கும் பொருட்டு வீட்டு மொட்டை மாடியில் சுத்தமாக வைத்திருக்கவும், மழைநீரை வடி குழாய்களில் அடைப்பு மற்றும் துவாரங்களை சரிசெய்து வைத்திருக்கவும், வடிகட்டும் தொட்டி/ கழிவுநீர் குழாயில் உள்ள கூழாங்கல் கருங்கல் ஜல்லியை சுத்தம் செய்து மீண்டும் நிரப்பி வைக்கவும், கட்டமைப்புகளில் மழைநீர் செல்வதை உறுதி படுத்தவும், சேமிப்பு கிணற்றில் உள்ள கசடுகளை அகற்றவும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் குறும்படத்தின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும்.

இப்பிரச்சார வாகனத்தில் மூலம் மழைநீரை நேரடியாகவோ அல்லது நிலத்தடியிலோ செலுத்தி எப்படி சேமிப்பது என்பது குறித்தும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிப்பு முறைகள், கூரையின் மேல் விழும் மழைநீரை சேமித்தல், திறந்தவெளி கிணறு மூலம் மழைநீர் சேகரித்தல், குழாய் கிணறு மூலம் மழைநீர் சேகரித்தல், கசிவு நீர் குழிகள் மற்றும் துளையுடன் கூடிய கசிவு நீர் குழிகள் மூலம் சேகரிக்கும் முறைகள் குறித்து குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேற்கண்ட வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் மற்றும் நிலத்தடி நீரின் தரம் மேம்படும்,பொது இடங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க இயலும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மழை நீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *