மாகாளய அமாவாசை- வடபழனியில் குவிந்த பக்தர்கள்…
மாகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுப்பதற்காக வட பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தனிமனித இடைவெளியின்றி குவிந்தனர்.
மாகாளய அமாவாசையை முன்னிட்டு எள்ளு, வாழைப்பழம், தேங்காய் மற்றும் அருகம் புல் வைத்து நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், அகத்துக்கீரை பசுமாட்டிற்கு கொடுப்பதும் வழக்கம். அந்த வகையில், தர்ப்பணம் கொடுப்பதற்காக வடபழனி முருகம் கோயிலில் பக்தர்கள் காலை முதலே குவிந்தனர்.
கோயில் குளத்திற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் கோயிலின் வடக்கு மற்றும் தெற்கு மாட தெருக்களின் இரு புறங்களிலும் தர்ப்பணம் கொடுத்தனர். தனிமனித இடைவெளியின்றியும் பெரும்பாலான பக்தர்கள் முறையாக முகக்கவசம் அணியாமலும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்றனர்.