பயங்கர ஆயுதங்களுடன் நாம் தமிழர் கட்சியினரை தாக்க முயற்சி… திமுகவை சேர்ந்த நபர் கைது

Loading

ஆம்பூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயன்ற திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் மீது பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முயன்ற திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், விண்ணமங்கலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் போஸ் என்பவரை ஆதரித்து அக்கட்சியினர், புதுமனை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுகவை சேர்ந்த விஜி, மதன் ஆகியோர் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி பயங்கர ஆயுதங்களை கொண்டு நாம் தமிழர் கட்சியினரை தாக்க முயன்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தும் அவர்கள், தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் திமுகவினருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி, ஆம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ரகளையில் ஈடுப்பட்ட திமுகவை சேர்ந்த மதன் தப்பியோடிய நிலையில் விஜி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0Shares

Leave a Reply