பொன்னுசாமி வில்லவராயர் நூற்றாண்டு நிறைவு விழா

Loading

தமிழகச் சட்ட மேலவை உறுப்பினர் பொன்னுசாமி வில்லவராயரின் நூற்றாண்டு நிறைவு விழா முப்பெரும் விழாவாகப் பெல் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.

வில்லவராயர் M.L.C.யின் நூற்றாண்டு நிறைவு விழா, மீனவ மாணவர்க்கு நிதியளிப்பு, எழுத்தாளர் நெய்தல் அண்டோ, பொன்னுசாமி வில்லவராயர் குறித்து எழுதிய இரு நூல்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு சகாயமாதா சால்டன்ஸ் நிர்வாக இயக்குநர் மைக்கேல் மேரத்தா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் நெய்தல் எழுத்தாளர்கள் & வாசகர்கள் இயக்கத்தின் சார்பில் மாணவியர்க்கு மணவை அல்போன்ஸ் நிதியுதவி வழங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் எ.பி.சி.வி. சண்முகம் வில்லவராயரின் சட்டமேலவை உரைகள் நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். நூலை செசில் மச்சாடோ பெற்றுக்கொண்டார்.

உழைப்பால் உயர்ந்த பொன்னுசாமி வில்லவராயர் நூலை தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு பைபர் படகு சங்கத் தலைவர் கயாஸ் வெளியிட, சேசையா வில்லவராயர் பெற்றுக்கொண்டார். நூலை முனைவர் அருட்பணி ஜாண் சுரேஷ் அறிமுகம் செய்து பேசினார்.

முன்னதாக செல்வி ஆண்டிரியா இறைவணக்கம் பாடினார். ஆசிரியர் சாக்ரோ வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை ஆசிரியர் பெனிட்டன் தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் நன்றியுடன் ஏற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரசார், பொன்னுசாமி வில்லவராயர் குடும்பத்தினர், கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள், அன்னை பரதர் நலச்சங்கத்தினர், தோணி உரிமையாளர் சங்கத்தினர்,குரூஸ் பர்னாந்தி ஸ் நற்பணி இயக்கத்தினர், புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப்பள்ளிஆசிரியர்கள், முன்னாள் மாணவர் இயக்கத்தினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாட்டை பொன்னுசாமி வில்லவராயர் நூற்றாண்டு விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

0Shares

Leave a Reply