“கற்பனையான” ஜம்மு-காஷ்மீர் – டாக்டர் ஜிதேந்திர சிங்
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணை
(தனிப்பொறுப்பு) அமைச்சர்; புவி அறிவியல் துறை இணை
(தனிப்பொறுப்பு) அமைச்சர்; பிரதமர் அலுவலக
விவகாரங்கள், பணியாளர் நலன், பொதுமக்கள்
குறைகேட்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்
துறை இணை அமைச்சர்.
சுமார் 70 ஆண்டுகளாக, ஜம்மு-காஷ்மீர் அரசியல்சாசன முரண்பாட்டின் நிழலில் இருந்துவந்தது.
உண்மையில், வரலாறு மற்றும் அனைத்து மனிதர்களுக்கும் சமஉரிமை என்ற கொள்கை ஆகியவைதவறாக பின்பற்றப்பட்டன. இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று, 370 மற்றும் 35ஏசட்டப் பிரிவுகள் என்ற நெருக்கடியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும்என்பது கடவுளின் உத்தரவாகக் கூட இருந்திருக்கலாம்.
மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய நிர்வாகம் மற்றும் அரசியல்சாசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் அதிவேகமாக சென்றதோடு மட்டுமல்லாமல்,இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் மாறுபட்ட கண்ணோட்டத்தில் நடத்தப்பட்டதால்,மனஅளவில் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுதலை கிடைத்தது.
நாட்டின் மற்ற பகுதிகளுடன் அனைத்து மட்டத்திலும் ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம், மோடியின்புதிய இந்தியாவில் தாங்களும் முக்கிய அங்கமாக இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புபூர்த்தியாகும் என்ற நம்பிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், புதியஇந்தியாவின் பயனாளிகளாகவும் மாறியுள்ளனர்.
“கற்பனையான” ஜம்மு-காஷ்மீர் என்பது, ஆரோக்கியமற்ற நடைமுறையை பின்பற்றுவது என்ற பழையநடைமுறையிலிருந்து விடுபட்டதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ளவிருப்பங்களின்படி, செயல்படவும் கற்றுக் கொண்டுள்ளது.
இன்று, வளர்ச்சியின் புதிய பயணத்தை ஜம்மு-காஷ்மீர் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னதாக அமலில்இல்லாத 170 மத்திய சட்டங்கள், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அனைத்துமத்திய சட்டங்களும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்துகின்றன.
15-வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, 2020-21-ம் நிதியாண்டில் ஜம்மு-காஷ்மீர் யூனியன்
பிரதேசத்துக்கு ரூ.30,757 கோடியும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ரூ.5,959 கோடியும்
ஒதுக்கப்பட்டுள்ளன.
குடியிருப்பு சட்டம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 6,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகள் மற்றும் 6000 பேர் தங்குவதற்கான ஏற்பாடுகள் ஆகியவை செய்யப்பட்டு வருவதால்,1990-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறிய காஷ்மீரி பண்டித்களை மறுகுடியமர்த்துவதற்கானவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. பள்ளத்தாக்கு பகுதியில்அமைதி மற்றும் பாதுகாப்புக்கான புதிய சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அதிவேகமானவளர்ச்சியைப் பெற்று வருகிறது.
முதன்மைத் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுவதோடு மட்டுமன்றி, வேளாண்மை,
தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ப்பு, மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறைகளில்அமல்படுத்தப்படும் திட்டங்களால் கூடுதலாக 4.5 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள்ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ஜம்மு-காஷ்மீர் இன்று அதிவேகமாக முன்னோக்கி
நடைபோட்டு வருகிறது. இன்றைய “கற்பனையான” ஜம்மு-காஷ்மீர், நாளைய முன்மாதிரியாக மாறும்நிலைக்கு வர உள்ளது.